ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி நேற்று நாடு திரும்பியபோது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, பின்னர் அதிலிருந்து மீண்டு அபாரமாக ஆடி தொடரைக் கைப்பற்றியது. சமீப காலங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு இந்திய அணி கண்டுள்ள மிகப்பெரிய வெற்றி, நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானதுதான்.
இந்திய கேப்டன் சர்தார் சிங் கூறுகையில், “ஆஸ்திரேலியத் தொடர் முழுவதும் இந்திய அணி விளையாடிய விதத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். 200-வது போட்டியில் விளையாடிய எனக்கு இந்த வெற்றியைவிட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது. இந்த வெற்றி சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாட உதவும். சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வீரர்கள் நன்றாக விளையாடுவார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி வரும் டிசம்பர் 6 முதல் 14 வரை ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜெர்மனியை சந்திக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago