உ.கோ.டி20: மேக்ஸ்வெல் அபாரம்: நியூஸிலாந்து 8 விக். இழப்புக்கு 142 ரன்கள்

By இரா.முத்துக்குமார்

தரம்சலாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 குரூப் 2 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 142 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். தன் அணியில் நேதன் மெக்கல்லமை நீக்கி விட்டு மெக்லினாகன்னை தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணி சர்ச்சைக்குரிய விதத்தில் ஏரோன் பின்ச், மற்றும் ஹேசில்வுட் ஆகியோரை உட்கார வைத்துக் களமிறங்கியது.

முதல் 8 ஓவர்களில் 65/1 என்று இருந்த நியூஸிலாந்து கடைசி 12 ஓவர்களில் 77 ரன்களையே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்ததற்கு ஒருவிதத்தில் காரணம் கோல்டன் ஆர்ம் கிளென் மேக்ஸ்வெல் என்றால் மிகையாகாது. காரணம் முதலில் அபாயகரமாகத் திகழ்ந்த மார்டின் கப்திலுக்கு அருமையாக ஓடி வந்து பவுண்டரி அருகே அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார், பிறகு ஆட்டத்தின் திருப்பு முனையாக கேன் வில்லியம்ன்சன் (24), கோரி ஆண்டர்சன் (3) ஆகியோரை 2 ஓவர்கள் இடைவெளியில் தனது அருமையான பந்துவீச்சில் வீழ்த்தி பெவிலியன் அனுப்பினார். பிறகு சாண்ட்னர் அடித்த ஷாட்டை டீப்பில் பீல்ட் செய்து கிளென் மேக்ஸ்வெல் த்ரோ அடித்ததில் 2-வது ரன் ஓடிய அவர் ரன் அவுட் ஆனார். லூக் ரோங்கிக்கும் மேக்ஸ்வெல் ஒரு கேட்ச் பிடித்தார். எனவே இன்று பேட்டிங்கிலும் அவரது பங்களிப்பு இருக்குமானால் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைக்கலாம்.

கப்தில் வழக்கம் போல் அவசர கதியில் தொடங்கினார், கூல்டர் நைல் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விளாசினார். வாட்சன் மறு முனையில் தனது ஓவரில் 5 ரன்களையே விட்டுக் கொடுத்தார், அதுவும் ஒரு லெக்திசை மோசமான பந்து விழுந்ததால் வில்லியம்சன் அடித்த பவுண்டரியால் அந்த ஓவரில் 5 ரன்கள்.

ஸ்மித் அப்போதுதான் மிகப்பெரிய பரிசோதனை செய்தார், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்டன் ஆகரை கொண்டு வந்தார். ஆனால் அவர் முதல் இரண்டு பந்துகளையும் அல்வா ரக புல்டாஸாக வீச இரண்டும் சிக்ஸர்கள். பிறகு கடைசி பந்தும் சிக்ஸ். இந்த ஓவரில் 18 ரன்கள். மீண்டும் வாட்சன் 4-வது ஓவரை சிக்கனமாக வீசி 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். 5-வது ஓவரை பாக்னர் வீச வில்லியம்சன் 2 பவுண்டரிகளை அடித்தார். இதில் இரண்டாவது ஷாட் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகியிருந்தால் இந்த உலகக்கோப்பையின் சிறந்த கேட்ச் ஆகியிருக்கும் ஆனால் முடியவில்லை. 6-வது ஓவரில் கூல்டர் நைலை கப்தில் தனது 4- வது சிக்சருக்கு மேலேறி வந்து நேராக தூக்கினார். 6 ஓவர்கள் முடிவில் 58/0 என்று அபாரத் தொடக்கம் கண்டது நியூஸிலாந்து.

லெக் ஸ்பின்னர் ஸாம்பா முதல் ஓவரை அருமையாக வீசி 3 ரன்களையே கொடுத்தார். 27 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்கள் அடித்திருந்த கப்தில், கடைசியில் பாக்னர் பந்தை லாங் ஆனில் தூக்கி அடிக்க நீண்ட தூரம் பவுண்டரியை சுற்றி ஓடி வந்த மேக்ஸ்வெல் அற்புதமாக கேட்ச் பிடித்தார்.

9-வது ஓவரை வீச வந்த மேக்ஸ்வெல், 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த கேப்டன் வில்லியம்சனை சாதுரியமான பந்து வீச்சில் நேராக தூக்கி அடிக்கச் செய்தார். சரியாக சிக்கவில்லை நேராக பவுண்டரி அருகே ஆகரிடம் கேட்ச் ஆனது.

இதன் பிறகு அதிரடி வீரர் கோரி ஆண்டர்சனையும் தவறிழைக்க வைத்து 3 ரன்களில் வீழ்த்தினார் மேக்ஸ்வெல். 6 ஓவர்களில் 58/0 என்பதிலிருந்து நியூஸிலாந்து 11 ஓவர்களில் 79/3 என்று ஆனது. மன்ரோ, டெய்லர்தான் ஒரே நம்பிக்கை என்ற நிலையில் மன்ரோ, மேக்ஸ்வெலை 2 முறை ஒரே ஓவரில் ரிவர்ஸ் ஷாட் பவுண்டரிகள் அடித்தார். ஆனால் 23 ரன்கள் எடுத்த மன்ரோ பொறுமை நீடிக்கவில்லை. மிட்செல் மார்ஷ் அவரை 3 பந்துகள் வெறுப்பேற்றியதால் அடுத்த பந்தில் புல் ஆடி மிட்விக்கெட்டில் பாக்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, வாட்சனை டெய்லர் ஒரு ஆக்ரோஷ சிக்சரை அடித்துப் பிறகு அதே ஷாட்டை திருப்பி அடிக்கும் முடிவில் அடுத்த பந்தே அவுட் ஆனார்.

கிராண்ட் எலியட் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். லூக் ரோங்கி 6, சாண்ட்னர் 1 ஆகியோர் சோபிக்கவில்லை நியூஸிலாந்து 142 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் பாக்னர், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வாட்சன், மிட்செல் மார்ஷ் ஆகியோரும் சிக்கனம் காட்டி தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஷேன் வாட்சன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்