ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் தெ.ஆ. கேப்டன் ஏ.பி. டிவிலியர்ஸ்.
பெர்த்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் 7,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
166 இன்னிங்ஸ்களில் அவர் 7,000 ரன்களைக் கடந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை வைத்திருந்தவர் சவுரவ் கங்குலி. இவர் 174 இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தார்.
ஆனாலும் டிவிலியர்ஸ் சாதனை குறுகிய காலமே நீடிக்கும் என்று தெரிகிறது. காரணம், இந்தியாவின் விராட் கோலி 137 இன்னிங்ஸ்களில் 6,069 ரன்களை எடுத்துள்ளார். இவர் டிவிலியர்ஸ் சாதனையை முறியடித்து விடுவார் என்று தெரிகிறது.
விராட் கோலிக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா 96 இன்னிங்ஸ்களில் 4,798 ரன்கள் எடுத்துள்ளார்.
கடைசி 20 ஒருநாள் இன்னிங்ஸ்களில் டிவிலியர்ஸ் 1,124 ரன்களை விளாசியுள்ளார். இதில் 4 சதங்கள் 6 அரைசதங்கள்.
முன்னதாக கங்குலிக்கு அடுத்த இடத்தில் பிரையன் லாரா 183 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை கடந்திருந்தார். டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 187 இன்னிங்ஸ்களிலும், ஜாக் காலிஸ் 188 இன்னிங்ஸ்களிலும், சச்சின் டெண்டுல்கர் 189 இன்னிங்ஸ்களிலும், கெய்ல் 189 இன்னிங்ஸ்களிலும், கேப்டன் தோனி 189 இன்னிங்ஸ்களிலும் பாண்டிங் 192 இன்னிங்ஸ்களிலும் 7000 ரன்களைக் கடந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago