டேவிஸ் கோப்பையை வென்றது சுவிட்சர்லாந்து

By செய்திப்பிரிவு

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி சாம்பியன் ஆனது.

பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து இடையிலான டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டி பிரான்ஸின் லில்லி நகரில் நடைபெற்றது. நேற்று நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ஃபெடரர் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸை சேர்ந்த ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார். இதன்மூலம் கடைசி ஆட்டம் ஆடுவதற்கு முன்பே சுவிட்சர்லாந்து 3-1 என்ற கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி டேவிஸ் கோப்பையை முதல்முறையாக வென்றது.

2-வது நாள் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் ஃபெடரர் வாவ்ரிங்கா ஜோடி வெற்றி பெற்றதால் சுவிட்சர்லாந்து 2-1 என முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றிருந்த ரோஜர் ஃபெடரரின் டென்னிஸ் வாழ்க்கையில் டேவிஸ் கோப்பையை வெல்லவில்லை என்ற குறை மட்டுமே இருந்தது. இப்போது அந்த குறையும் தீர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்