ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஹாலந்து அணியிடம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. ஹாலந்து கோல் கீப்பர் ஜேப் ஸ்டாக்மேன் அற்புதமான தடுப்பு உத்தியை வெளிப்படுத்தினார்.
கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்குச் சார்பான 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன, ஒன்றைக்கூட ஹாலந்து தடுப்பாட்ட வீரர்களைத் தாண்டி கோலுக்குள் செலுத்த முடியவில்லை, ருபிந்தர் பால் சிங், ரகுநாத் ஆகியோரால் கடைசி 5 வாய்ப்புகளையும் கோலாக மாற்ற முடியவில்லை.
ஹாலந்து கோல் கீப்பர் அற்புதமாக இரண்டைத் தடுத்தார், ஒன்றை தடுப்பாட்ட வீரர் அபாரமாக தடுத்தார், ஆனால் சர்க்கிளுக்குள் இவையெல்லம் நடைபெற்றதால் மீண்டும் மீண்டும் 5 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன, கடைசி வாய்ப்பு ஏறக்குறைய சமன் கோல் கிடைத்திருக்கும் ஆனால் இம்முறையும் ஹாலந்து கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். இதுமட்டுமல்ல முன்னதாகவும் ஜேப் ஸ்டாக்மேன் இந்திய வாய்ப்பு ஓரிண்டை தடுத்தார். ஏதோ ரகுநாத் ஒரு முறை அற்புதமாக அவரைத் திசைத்திருப்பி அவருக்கு இடது புறமாக வேகமாக அடிக்க இந்தியா முதல் கோலை அடித்து சமன் செய்தது.
மீண்டும் அந்த 4-வது கால்மணி நேர ஆட்டம்தான் இந்தியாவுக்கு எமனாகியது. இதில்தான் ஹாலந்து வெற்றிக்கான 2வது கோலை அடித்தது.
ஒரு நேரத்தில் ரகுநாத், எஸ்.வி.சுனில் இருவருமே பவுல் செய்ய மஞ்சள் அட்டைக் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர், 3-வது கால் மணி நேர ஆட்டம் முடிய இருக்கும் தறுவாயில் இந்தியா 9 பேர்களுடன் ஆடியது. இதனையடுத்து 5 நிமிட நேர தண்டனை முடியவடைய வேண்டுமென்பதால் 4வது கால் மணி நேர ஆட்டத்தின் தொடக்கத்திலும் இந்திய அணி 9 பேர்களுடன் விளையாட வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டது.
4-வது கால் மணி ஆட்டம் தொடங்கி 2-வது நிமிடத்திலேயே ஹாலந்து பெனால்டி கார்னர் பெற்றது, இம்முறை வலது புறம் டைவ் அடித்து அருமையாகத் தடுக்க 1-1 நீடித்தது.
கோல் நோக்கி அடிக்கப்பட்ட 20 ஷாட்களில் 14-ஐ தடுத்துள்ளார் ஸ்ரீஜேஷ் இந்தத் தொடரில். இது உண்மையில் அசாதாரணத் திறமை வெளிப்பாடாகும். 8 நிமிடங்கள் இருக்கும் போது 11 வீரர்களுடன் இந்தியா ஆடியது. மீண்டும் ஹாலந்துக்கு பெனால்டி வாய்ப்பு இம்முறையும் ஸ்ரீஜேஷ் திறமையால் கோலாகவில்லை.
ஹாலந்து தொடர்ந்து கடும் நெருக்கடிகள் கொடுக்க கோல் பகுதியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து தவறிழைக்க நேரிட ஆட்டம் முடிய 6 நிமிடங்கள் இருக்கும் போது ஹாலந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. ஹாலந்தின் மின்க் வான் டெர் வீர்டன் என்ற வீரர் ஸ்ரீஜேஷுக்கு வலது புறம் அடித்து 2-வது கோலை அடித்தார்.
3 நிமிடங்கள் இருக்கும் போது ஸ்ரீஜேஷ் வெளியேறினார், ரகுநாத் ஸ்வீப்பர் கோல் கீப்பராகவும் பொறுப்பேற்றார், ஒரு பார்வர்ட் வீரரை இந்தியா களமிறக்கியது.இது மிகவும் அரிதான நிகழ்வே. இதன் பிறகே கடைசி நிமிடத்தில் 5 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு ஷாட்டை கூட கோலுக்குள் செலுத்த முடியவில்லை.
முன்னதாக முதல் அரைமணி நேர ஆட்டத்தில் இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆடாமல் ஏனோதானோவென்று ஆட ஆஃப் டைமில் 0-0 என்றே இருந்தது.
3-வது கால் மணிநேர ஆட்டம் தொடங்கி 2-வது நிமிடத்தில் அதாவது 32-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் டிராக் பிளிக் ஆட ஸ்ரீஜேஷ் அற்புதமாகத் தடுத்தார் ஆனால் ரீபவுண்ட் பந்தை எடுக்க இந்திய வீரர் இல்லை, மாறாக ஹாலந்து வீரர் ரீபவுண்டை எடுத்து கோலாக மாற்றினார், முதல் கோலை அடித்தவர் ரோஜியர் ஹாஃப்மென்.
அதன் பிறகே இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ருபீந்தர் பால் சிங் நேராக ஹாலந்து கோல் கீப்பர் காலில் அடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது அந்த பெனால்டி வாய்ப்பில் ரகுநாத் அற்புதமாக கோலிக்கு இடது புறம் வேகமாக அடித்தார்.
இந்தியா தற்போது கனடாவை வென்று காலிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago