ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் ஜஸ்டின் லாங்கர் உலகின் பல அதிவேகப் பந்து வீச்சாளர்களின் கறாரான தொடக்க ஓவர்களைச் சந்தித்தவர்.
இயன் பிஷப், ஆலன் டோனல்டு, வால்ஷ், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் குறிப்பாக ஷோயப் அக்தர், இவர் லாங்கரை ஒவ்வொரு முறையும் பவுன்சரால் ஹெல்மெட்டைத் தாக்காமல் இருந்ததில்லை.
1993 முதல் 2007 வரை லாங்கர் 105 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ளார், மிகவும் கடினமான தொடக்க வீரர். இவரது சிறப்பு என்னவெனில் வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவர் த விக்கெட்டில் வந்து அவரது உடலுக்குக் குறுக்காகச் செல்லுமாறு வீசும் கடினமான பந்துகளை எதிர்கொள்வதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர் என்றே கூற வேண்டும். காரணம் பொதுவாக பவுலர்கள் ஆஃப் ஸ்டம்ப், சற்று வெளியே வீசினால் எட்ஜ் எடுக்கும் என்று இவருக்கு வீசினால் இவரை சுலபமாக வீழ்த்த முடியாது, மற்ற இடது கை வீரர்களுக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்... லாங்கர் அத்தகைய பந்துகளைத் துல்லியமாக கவர் பவுண்டரிக்கு அனுப்பி விடுவார், மேலும் எட்ஜ் எடுக்கும் வாய்ப்புக்காக கவர் திசையை பொதுவாக கேப்டன்கள் இவருக்குக் காலியாக வைத்திருப்பார்கள், ஆனால் இவர் 70% அத்தகைய பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியுள்ளார்.
இப்படி வேகப்பந்து வீச்சாளர்களின் சிம்ம சொப்பன தொடக்க வீரராக இருந்து வந்த ஜஸ்டின் லாங்கரிடம் உங்களை ரொம்பவும் கஷ்டப்படுத்திய பவுலர் யார் என்று கேட்ட போது “முத்தையா முரளிதரன்” என்று கூறியது பலருக்கும் ஆச்சரியமளிப்பதாகவே அமைந்தது.
இனி ஜஸ்டின் லாங்கர், “இலங்கையின் முரளிதரன் என்றே நான் கூறுவேன். இது சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம், அதுவும் அவர் ஸ்பின்னர் என்பதால் ஆச்சரியமளிக்கலாம் ஆனால் அவர் பல முறை என் இரவுத்தூக்கத்தை கெடுத்துள்ளார். அவரது பந்து வீச்சு அந்த அளவுக்கு எனக்கு அச்சுறுத்தலை அளித்தது.
அவர் ஒரு மெஜீஷியன். என் மனம் கூறும் அவரது இந்தப் பந்து ஆஃப் ஸ்பின் தான் என்று ஆனால் அவர் பந்தை ரிலீஸ் செய்யும் விதம் லெக் ஸ்பின் பந்து போல் இருக்கும். நேர்மையாகக் கூற வேண்டுமெனில் அது ஒரு துர்சொப்பனம்தான். மிகவும் துல்லியமாக அவர் வீசியதால் அவரிடம் ரன்கள் எடுப்பது மிகக் கடினம். அதுவும் மைல் கணக்கில் பந்தைத் திருப்புவார். மேலும் அவரிடம் அபரிமிதமான ஒரு போட்டி மனோபாவம் உண்டு.
வேகப்பந்து வீச்சாளர்களில் வாசிம் அக்ரம், அவர் ஒரு ஜீனியஸ். பிறகு ஷோயப் அக்தர் உண்மையில் எக்ஸ்பிரஸ் வேகம்.
ஒவ்வொரு பவுலரையும் ஒவ்வொரு விதமாக ட்ரீட் செய்ய வேண்டும், ஷோயப் அக்தரைப் பொறுத்தவரையில் அவரைக் கொஞ்சம் சீண்டினால் மேலும் மேலும் வேகமாக வீசுவார் அப்படி வீச முயற்சி செய்யும் போது நாம் ஓரிரண்டு பவுண்டரிகளை அடித்து விட முடியும். அதனாலேயே நான் அவரை நோக்கி புன்னகைத்த படியே இருப்பேன், பலவேளைகளில் நாங்கள் அவரை கொஞ்சம் எரிச்சலூட்டுவோம், அவர் கோபக்கனலாகி விடுவார். அதுதான் எங்கள் தந்திரம்” என்றார் லாங்கர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago