ஐ.பி.எல் ஏலம் நாள் 2: ராஸ் டெய்லரை ரூ.2 கோடிக்கு வாங்கியது டெல்லி

By செய்திப்பிரிவு

பெங்களூரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக கடந்து இரண்டு நாட்களாக நடந்து வந்த ஏலம், இன்று முடிந்தது. நேற்று அதிகபட்ச விலையாக, இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இதேபோல் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கை ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ்.

இன்றைய ஏலத்தில், அதிகபட்சமாக இந்தியாவின் கரண் சர்மா, ரூ.3.75 கோடிக்கு ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்டார். இவருக்கு அடுத்து ரிஷி தவான் ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் ராஸ் டைலரை, டெல்லி அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது. நேற்று ஏலத்தில் எடுக்கப்படாத இலங்கையின் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே, இன்று மீண்டும் ஏலத்தில் விடப்பட்டார். ஆனால் இன்றும் அவரை யாரும் வாங்க முன்வரவில்லை.

அதே போல, இந்தியாவின் பத்ரிநாத், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டேரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ், நியூஸிலாந்தின் மார்டின் கப்டில், ஆஸ்திரேலியாவின் கேமரூன் வொயிட், டிம் பெயின் உள்ளிட்டோரையும் எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை.

இன்றைய ஏலத்தில் பெரும்பாலும் இந்தியாவின் உள்ளூர் வீரர்களே (ரஞ்சி, முதல் தரப் போட்டிகளில் ஆடியவர்கள்) ஏலத்தில் விடப்பட்டனர். அதில், சமீபத்தில் சிறப்பாக ஆடிய வீரர்களை எடுப்பதில் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.

இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள், அவர்களை எடுத்த அணி மற்றும் அவர்களது விலை குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு:



வீரர்

தொகை

அணி

அனிருத்தா ஸ்ரீகாந்த் (இந்தியா)

ரூ.20 லட்சம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

விஜய் சால் (இந்தியா)

ரூ.30 லட்சம்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

பாபா அபராஜித் (இந்தியா)

ரூ.10 லட்சம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

குருகீரத் சிங் (இந்தியா)

ரூ.1.3 கோடி

கிங்ஸ் 11 பஞ்சாப்

உன்முக்த் சந்த் (இந்தியா)

ரூ.65 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

மனீஷ் பாண்டே (இந்தியா)

ரூ.1.7 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மன்ப்ரீத் ஜுனேஜா (இந்தியா)

ரூ.10 லட்சம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

கேதர் ஜாதவ் (இந்தியா)

ரூ.2 கோடி

டெல்லி டேர்டெவில்ஸ்

சூர்யகுமார் யாதவ் (இந்தியா)

ரூ.70 லட்சம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்



வீரர்

தொகை

அணி

மயங்க் அகர்வால் (இந்தியா)

ரூ.1.6 கோடி

டெல்லி டேர்டெவில்ஸ்

கே.எல். ராகுல் (இந்தியா)

ரூ.1 கோடி

சன்ரைஸர் ஹைதராபாத்

மன்விந்தர் பிஸ்லா (இந்தியா)

ரூ.60 லட்சம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சி.எம் கவுதம் (இந்தியா)

ரூ.20 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்

அங்குஷ் பெயின்ஸ் (இந்தியா)

ரூ.10 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஆதித்யா தாரே (இந்தியா)

ரூ.1.5 கோடி

மும்பை இந்தியன்ஸ்

சுஷாந்த் மராதே (இந்தியா)

ரூ.10 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்

ரஜத் பாடியா (இந்தியா)

ரூ.30 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ரிஷி தவான் (இந்தியா)

ரூ.3 கோடி

கிங்ஸ் 11 பஞ்சாப்



வீரர்

தொகை

அணி

மந்தீப் சிங் (இந்தியா)

ரூ.80 லட்சம்

கிங்ஸ் 11 பஞ்சாப்

பர்வேஸ் ரசூல் (இந்தியா)

ரூ.95 லட்சம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

கெவின் கூபர் (மே,இ.தீவுகள்)

ரூ.30 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

மிதுன் மன்ஹாஸ் (இந்தியா)

ரூ.30 லட்சம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

இக்பால் அப்துல்லா (இந்தியா)

ரூ.65 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ரயன் டென் டோஸ்சாடே (நெதர்லாந்து)

ரூ.1 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தவால் குல்கர்னி (இந்தியா)

ரூ.1.1 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்

ரஹில் சுக்லா (இந்தியா)

ரூ.40 லட்சம்

டெல்லி டேர்டெவில்ஸ்

அனுரீத் சிங் (இந்தியா)

ரூ.20 லட்சம்

கிங்ஸ் 11 பஞ்சாப்



வீரர்

தொகை

அணி

ஜஸ்ப்ரீத் பும்ரா (இந்தியா)

ரூ.1.2 கோடி

மும்பை இந்தியன்ஸ்

சந்தீப் சர்மா (இந்தியா)

ரூ.85 லட்சம்

கிங்ஸ் 11 பஞ்சாப்

பிரசாந்த் பரமேஸ்வரன் (இந்தியா)

ரூ.30 லட்சம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

அபு நெசிம் அஹமத் (இந்தியா)

ரூ.30 லட்சம்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

சித்தார்த் கவுல் (இந்தியா)

ரூ.45 லட்சம்

டெல்லி டேர்டெவில்ஸ்

ஈஸ்வர் பான்டே (இந்தியா)

ரூ.1.5 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ்

குல்தீப் சிங் யாதவ் (இந்தியா)

ரூ.40 லட்சம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சிங் சஹால் (இந்தியா)

ரூ.10 லட்சம்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

ஷதாப் ஜகாதி (இந்தியா)

ரூ.20 லட்சம்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

பிரவீன் தாம்பே (இந்தியா)

ரூ.10 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்



வீரர்

தொகை

அணி

ஷபாஸ் நதீம் (இந்தியா)

ரூ.85 லட்சம்

டெல்லி டேர்டெவில்ஸ்

ஷ்ரேயஸ் கோபால் (இந்தியா)

ரூ.10 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்

பவன் நெகி (இந்தியா)

ரூ.10 லட்சம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

கரண் சர்மா (இந்தியா)

ரூ.3.75 கோடி

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

கருண் நாயர் (இந்தியா)

ரூ.75 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

திஷாந்த் யக்னிக் (இந்தியா)

ரூ.30 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

அமித் பவுனிகர் (இந்தியா)

ரூ.20 லட்சம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

விஜய் சங்கர் (இந்தியா)

ரூ.10 லட்சம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

அக்‌ஷர் படேல் (இந்தியா)

ரூ.75 லட்சம்

கிங்ஸ் 11 பஞ்சாப்



வீரர்

தொகை

அணி

ஜலஜ் சக்சேனா (இந்தியா)

ரூ.90 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்

ரோனித் மோரே (இந்தியா)

ரூ.10 லட்சம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சந்தீப் வாரியர் (இந்தியா)

ரூ.10 லட்சம்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

ஹர்ஷால் படேல் (இந்தியா)

ரூ.40 லட்சம்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

வீர் பிரதாப் சிங் (இந்தியா)

ரூ.40 லட்சம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பி. ஹெண்ட்ரிக்ஸ் (தென் ஆப்பிரிக்கா)

ரூ.1.8 கோடி

கிங்ஸ் 11 பஞ்சாப்

விக்ரம்ஜீத் மாலிக் (இந்தியா)

ரூ.20 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்



வீரர்

தொகை

அணி

ராஸ் டைலர் (நியூஸிலாந்து)

ரூ.2 கோடி

டெல்லி டேர்டெவில்ஸ்

நமான் ஓஜா (இந்தியா)

ரூ.50 லட்சம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

கிரிஸ் லின் (ஆஸ்திரேலியா)

ரூ.1.3 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அபூர்வ் வான்கடே (இந்தியா)

ரூ.10 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்

ரிக்கி புய் (இந்தியா)

ரூ.10 லட்சம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

தன்மய் மிஷ்ரா (இந்தியா)

ரூ.10 லட்சம்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

மிலிந்த் குமார் (இந்தியா)

ரூ.10 லட்சம்

டெல்லி டேர்டெவில்ஸ்

ஆண்ட்ரே ரஸ்ஸல் (மே.இ.தீவுகள்)

ரூ.60 லட்சம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஜான் ஹாஸ்டிங்ஸ் (ஆஸ்திரேலியா)

ரூ.50 லட்சம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ராகுல் டெவாடியா (இந்தியா)

ரூ.10 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்



வீரர்

தொகை

அணி

எஸ்.எஸ். மண்டல் (இந்தியா)

ரூ.10 லட்சம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கரன்வீர் சிங் (இந்தியா)

ரூ.10 லட்சம்

கிங்ஸ் 11 பஞ்சாப்

முரளி கார்த்திக் (இந்தியா)

ரூ.1 கோடி

கிங்ஸ் 11 பஞ்சாப்

வெயின் பார்னெல் (தென் ஆப்பிரிக்கா)

ரூ.1 கோடி

டெல்லி டேர்டெவில்ஸ்

மெர்சாண்ட் டி லாங் (தென் ஆப்பிரிக்கா)

ரூ.30 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்

கிருஷ்மர் சன்டோகி (மே.இ.தீவுகள்)

ரூ.30 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்

ஆஷிஸ் ரெட்டி (இந்தியா)

ரூ.20 லட்சம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

அங்கித் சர்மா (இந்தியா)

ரூ.10 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

அமித் மிஷ்ரா * (இந்தியா)

ரூ.10 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

சச்சின் ரானா (இந்தியா)

ரூ.20 லட்சம்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

ஷரத் (இந்தியா)

ரூ.10 லட்சம்

டெல்லி டேர்டெவில்ஸ்

சிவம் சர்மா (இந்தியா)

ரூ.10 லட்சம்

கிங்ஸ் 11 பஞ்சாப்

தீபக் ஹூடா (இந்தியா)

ரூ.40 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

சாமா மிலிந்த் (இந்தியா)

ரூ.10 லட்சம்

ஹைதராபாத்

ஷார்துல் தாகூர் (இந்தியா)

ரூ.20 லட்சம்

கிங்ஸ் 11 பஞ்சாப்

ஜயந்த் யாதவ் (இந்தியா)

ரூ.10 லட்சம்

டெல்லி டேர்டெவில்ஸ்

பவன் சுயல் (இந்தியா)

ரூ.10 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்

பென் டங்க் (ஆஸ்திரேலியா)

ரூ.20 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்

தேபரத தாஸ் (இந்தியா)

ரூ.20 லட்சம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

யோகேஷ் டகவாலே (இந்தியா)

ரூ.10 லட்சம்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)

ரூ.1 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

*வேகப்பந்து வீச்சாளர். சுழற்பந்து வீச்சாளர் மிஷ்ரா அல்ல

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

விளையாட்டு

58 mins ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்