பாக். ரசிகர்களை கடுப்பேத்துகிறதா புதிய மோக்கா வீடியோ?

By சரா

இந்தியாவுடான போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் வெற்றியே பெறாததைச் சுட்டிக்காட்டி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளம்பரம் ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது. தமது தேச அணி வெற்றி பெற்றால் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற பாகிஸ்தான் ரசிகர்களின் எண்ணம் கடைசி வரை நிறைவேறாமலே இருப்பதாக அமைந்திருந்த அந்த வீடியோ இணையத்தில் ஹிட் ஆனது.

முதல் வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டத்தை முன்வைத்து ஒரு விளம்பரத்தை பதிவேற்றம் செய்தது. அது, இந்திய ரசிகர்களின் ஏக்கத்தைக் குறிப்பாதாக நையாண்டியுடன் இருந்தது. அந்த வீடியோவுக்கு பதிலடி தரும் வகையில், இந்திய ரசிகர்கள் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்தனர். அதுவும் யூடியூபில் மெகா ஹிட் ஆனது. விவரம்: >தென்னாப்பிரிக்க அணியை 'மொக்கை'யாக்கிய இந்திய ரசிகர்களின் பதிலடி வீடியோ!

இந்த நிலையில், உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வீழ்த்திய சில நொடிகளில் 'மோக்கா' வீடியோ விளம்பரத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது. மோக்கா என்றால் வாய்ப்பு அல்லது சந்தர்ப்பம் என்று பொருள்.

இந்தப் புதிய வீடியோவில், தென் ஆப்பிரிக்க ரசிகர்களுடன் அமர்ந்து, அவர்களது சீருடை பனியன் போட்டுக்கொண்டு டிவியில் மேட்ச் பார்க்கும் பாகிஸ்தான் ரசிகர், இந்தியா வெற்றி பெற்றதால் பட்டாசு வெடிக்க முடியாமல் கடுப்படைகிறார். அப்போது, எதிர்பார்த்தபடியே வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கிறது. யாரென்று பார்த்தால், யூ.ஏ.இ. ரசிகர் தனது அணியின் டி-ஷர்ட்டை பாகிஸ்தான் ரசிகரிடம் அளித்து, அதைப் போட்டுக்கொண்டு இந்தியா - யூஏஇ ஆட்டத்தைப் பார்க்கும்படி குறிப்பால் சொல்லிவிட்டு கிளம்புறார்.

இந்த வீடியோ பதிவு, தங்களின் மனப்பான்மையைத் தவறாக சித்தரிப்பதாகவும், இந்தியா தோற்பதற்காக எதையும் செய்வோம் என்பது தவறானது என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வீடியோ பகிர்விலும், சமூக வலைதளங்களிலும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், முதல் வீடியோவில் பாகிஸ்தான் ரசிகர்களை கேலி செய்தும், இரண்டாவது வீடியோவில் இந்திய ரசிகர்களைக் கலாய்த்தும் 'மோக்கா' விளம்பரம் வெளியானது. இப்போது, இந்திய வெற்றியைக் கொண்டாடும் வகையில் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சினை என்று இந்திய ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், பாகிஸ்தான் அணியையும், அதன் ரசிகர்களையும் கிண்டல் செய்தால்தான் எண்ணிக்கையில் அதிகம் உள்ள இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்கிற ரீதியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செயல்படுவதாகவும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டி முடிவையோட்டி, அடுத்து இந்தியா - யூஏஇ போட்டிக்கான விளம்பரத்தில் பாகிஸ்தானை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்று சுட்டிக்காட்டுகிறார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள். நீங்களே பார்த்துவிட்டு, உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்