ஷாகிப் 217, முஷ்பிகுர் 159; சாதனை கூட்டணி: நியூஸி. பவுலிங்கைப் புரட்டிய வங்கதேசம் 542/7

By இரா.முத்துக்குமார்

வெலிங்டனில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 542 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வருகிறது.

இடது கை ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 276 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன் 217 ரன்கள் எடுக்க, முஷ்பிகுர் ரஹிம் 260 பந்துகளில் 23 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 159 ரன்கள் எடுக்க, இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்காக 359 ரன்களைச் சேர்த்து சாதனை புரிந்துள்ளனர், வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவே அதிகபட்ச கூட்டணி ரன்கள். 542 ரன்கள் என்பது வங்கதேசத்துக்கு வெளியே இரண்டாவது பெரிய ஸ்கோராகும்.

ஷாகிப் அல் ஹசன் 217 ரன்கள் வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச தனிப்பட்ட ரன்களாகும். பிட்ச் பேட்ஸ்மென்களின் சொர்க்கமான நிலையில் ஷாகிப், முஷ்பிகுர் இணைந்து கிட்டத்தட்ட 83 ஓவர்களை விளையாடி 359 ரன்களைச் சேர்த்தனர். ஷாகிப் அல் ஹசன் ஸ்ட்ரைக் ரேட் 78 ரன்கள் என்பதும் இரட்டைச் சதம் எனும்போது மிகப்பெரிய சாதனையே.

டிம் சவுதி, டிரெண்ட் போல்ட், நீல் வாக்னர், கொலின் டி கிராண்ட்ஹோம் இருந்தும் ஷாகிப், முஷ்பிகுர் இணையை உடைக்க முடியவில்லை.

முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வங்கதேசம் தமிம் இக்பாலின் 50 பந்து 56 ரன்களுடன் 154/3 என்று இருந்தது, மொமினுல் ஹக் 64 ரன்களுடனும் ஷாகிப் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று காலை சவுதி பந்தை மொமினுல் எட்ஜ் செய்து 64 ரன்களில் வெளியேறினார். 160/4.

அதன் பிறகு நியூஸிலாந்து பந்து வீச்சு பிசுபிசுத்துப் போக 61 ஓவர்களில் 273 ரன்களை விட்டுக் கொடுத்தது. முஷ்பிகுர் தொடக்கத்தில் ஏகப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொண்டு அடிகள் வாங்கினார், விரல்களை பந்து ‘பச்’ என்று அடித்தது. ஆனால் அவர் தைரியத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கிடையே புல் லெந்த் பந்துகளை அவர் பவுண்டரிகளாக மாற்றினார். ஆஃப் திசையில் கவர், மிட் ஆஃப், பாயிண்ட், லெக் திசையில் ஆன் டிரைவ், பிளிக், என்று அவர் கடைசியில் பாயிண்டில் அடித்த ஷாட் மூலம் தனது 4-வது சதத்தை எடுத்தார்.

ஆனால் மறுமுனையில் ஷாகிப் அல் ஹசனுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் எழும்பவில்லை இதனால் அவர் புல், கட் ஷாட்கள் என்று அசத்தினார். 150 பந்துகளில் 100 ரன்களை ஷாகிப் எடுத்தார். வங்கதேச கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் ரன்கள் பட்டியலில் ஷாகிப் தற்போது 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

191 பந்துகளில் 150 ரன்களை 22 பவுண்டரிகளுடன் எட்டிய ஷாகிப் அல் ஹசன் 253 பந்துகளில் 30 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் எடுத்தார். கடைசியில் 217 ரன்கள் எடுத்த நிலையில் வாக்னரிடம் ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் முன்னதாக வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து போல்ட்டிடம் வீழ்ந்தார். ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் வாக்னர் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆட்ட முடிவில் சபீர் ரஹ்மான் 10 ரன்களில் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 124 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட், சவுதி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

டாஸ்வென்று வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்ததற்கு வில்லியம்சன் வருந்தியிருப்பார் என்பதோடு முஷ்பிகுர் ரஹிம் 28 ரன்களில் இருந்த போது 2-வது ஸ்லிப்பில் ஜீத் ராவல் விட்ட கேட்ச் மற்றும் ஷாகிப் அல் ஹசன் நேற்று 4 ரன்களில் இருந்த போது மிட்செல் சாண்ட்னர் எளிதான வாய்ப்பையும் கோட்டை விட்டதை நினைத்து நிச்சயம் கோபமடைந்திருப்பார்.

வங்கதேச கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு நாளாக இது அமைந்துள்ளது. பிட்ச் பேட்டிங்கிற்கு சொர்க்கமானாலும் வங்கதேச ஸ்பின்னர்கள் நியூஸிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மெஹதி ஹசன் மிராஸ் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்