ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இயன்ற வரை போராடிய பி.வி.சிந்து வெள்ளி வென்று சரித்திர சாதனை

By ஆர்.முத்துக்குமார்

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மாரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய பி.வி.சிந்து வெற்றிக்கனியை பறிக்க முடியாமல் வெள்ளி வென்று சரித்திர சாதனை படைத்தார்.

ரியோ ஓலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மாரின் 3 செட்கள் ஆட்டத்தில் 2-1 என்று வென்று தங்கம் வெல்ல, இயன்ற வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார்.

முதல் முறையாக ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீராங்கனை என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தினார் பி.வி.சிந்து.

பரபரப்பான இறுதிப் போட்டியில் முதல் செட்டை அபாரமாக ஆடி 21-19 என்று வெற்றி பெற்ற சிந்து, இரண்டாவது செட்டில் 12-21 என்று தோல்வி அடைந்தார், 3-வது செட்டில் சற்றும் மனம் தளராது ஆடிய பி.வி. சிந்து கடைசியில் போராடி 15-21 என்று தோல்வி தழுவினார்..

உலகத் தரவரிசை நம்பர் 1 ஸ்பெயின் வீராங்கனை கடைசியில் 19-21, 21-12, 21-15 என்ற செட்களில் வெற்றி பெற்று தங்கம் வென்றார், பி.வி.சிந்து தனது அறிமுகப் ஒலிம்பிக் போட்டியிலேயே இந்தியாவுக்காக பாட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் முதல்முறையாக வென்று சரித்திரம் படைத்தார்.

அறிமுக ஒலிம்பிக் தொடரில் சிந்து வெளிப்படுத்திய ஆட்டத்திறன், மனோவலிமை அசாதாரணமானது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.



முதல் செட்டில் 5 புள்ளிகளைத் தொடர்ந்து பெற்று வென்ற சிந்து:

முதல் செட்டில் தொடக்கத்தில் சிந்து அடித்த ஷாட்களை அபாரமாகக் கணித்து ஆடாமல் விட்டே அவுட் செய்த கரோலினா மரின் 5-2 என்று முன்னிலை பெற்றார். முதலில் வலைக்கருகில் சிந்துவை சில மென்மையான டேப்கள் மூலம் முன்னுக்கு இழுத்த மரின் பிறகு சக்தி வாய்ந்த ஷாட்களை சிந்து தொட முடியாது அடித்து புள்ளிகளை அள்ளினார். இதனால் 10-6 என்று மாரின் முன்னிலை பெற்றார்.

பிறகு சிந்து ஒரு ஸ்மாஷ் ஒரு லாப் மூலம் இரண்டு புள்ளிகளை பெற மாரின் ஒரு தவறிழைக்க 9-13 என்று நெருங்கினார் சிந்து. கடைசியில் சிந்து மாரினை சில தவறுகளை இழைக்கச் செய்து அவரை முன்னுக்குப் பின்னும் அலைக்கழித்து 14-16 என்று நெருங்கினார். கடைசியில் ஒரு 49 ஷாட் ராலியில் மரின் கடைசியில் லாங்கில் அடித்து தவறிழைத்தார் 17-16 என்று நெருங்கியது.

கடைசியில் இரண்டு அபாரமான ஷாட்கள் மூலம் 19-16 என்று மாரின் முன்னிலை பெற்றார். சரி வெற்றி பெற தேவை 2 புள்ளிகள் என்ற நிலையில் பி.வி.சிந்து தற்போது மாரினை சில சிக்கல்களுக்குள்ளாக்கினார், தனது கடினமான கோணங்களினால் மாரின் தொடர்ச்சியாக 3 ஷாட்களை வெளியே அடித்தார், ஒரு நெஞ்சுயர பந்தை நெட்டில் தட்ட சிந்து 20-19 என்று முன்னேறினார், கடைசியில் சிந்து ஒரு ஷாட்டை மாரினின் உடலுக்கு அடிக்க எடுக்கத் திணறி முதல் செட்டை இழந்தார் மாரின் சிந்து 21-19 என்று வென்றார்.

2-வது செட்டில் மாரின் ஆதிக்கம்:

2-வது செட்டில் தனது சப்தத்தையும் ஆக்ரோஷத்தையும் கூட்டிய மாரின் சில ஷாட்கள் மூலம் தொடக்கத்திலேயே 3-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு மாரின் விடாமல் சில அபாரமான முன் கை வாகான ஸ்லைஸ், பந்தை கீழே அடிப்பது, சிந்துவின் ராக்கெட் தொட முடியாது தள்ளி அடிப்பது என்று ஆதிக்கம் செலுத்தி 6-2 என்று முன்னிலை பெற்றார். இதன் பிறகு தொடர்ச்சியான ஆதிக்கத்தில் மாரின் சிந்துவின் மனோபலத்தை குலைக்குமாறு ஆடினார், இடது கை வீரர் என்பதால் ஷாட்கள் எந்தப்புறம் அடிப்பார் என்பதை கணிக்க முடியவில்லை, அவர் ரிடர்னிலும் பெடரர் போல் முதுகைக் காட்டிக் கொண்டெல்லாம் எடுத்து 11-2 என்று முன்னிலை பெற்றார். கடைசியில் 8 புள்ளிகள் இடைவெளி இருவருக்கும் வர 21-12 என்றி மாரின் வென்றார்.

உயிரைக்கொடுத்து போராடிய இறுதி செட்:

3-வது இறுதி செட் பரபரப்பான எதிர்பார்ப்புடன் தொடங்கியது. மாரின் சர்வில் வென்றார், பிறகு சிந்து ஒரு புள்ளி வென்றார், அடுத்ததாக தலைக்கு மேல் வந்த பந்தை தனது வலுவான ஸ்மாஷ் ஷாட்டை ஆடினார் சிந்து ஆனால் பந்து வலையைத் தாக்க மாரின் 3-1 என்று முன்னிலை பெற்றார்.

அதன் பிறகு மாரின் தனது ஆட்டப்பாணியையே மாற்றி ரிஸ்டி ஷாட்களை ஆடி 5-1 என்று முன்னிலை பெற்றார். அடுத்ததாக மாரின் ஒரு கிராஸ் கோர்ட் ஷாட்டை வெளியில் அடிக்கவும் சிந்து ஒரு ஸ்மாஷை தாக்கவும் 3-6 என்று நெருங்கினார் சிந்து. இந்நிலையில் சிந்துவின் பேக்ஹேண்டுக்கு பந்தை அடித்து 9 புள்ளிகளுக்குச் சென்றார் மாரின், ஆனால் சிந்துவும் விடவில்லை ஒரு ஸ்மாஷ் மூலம் 5-9 என்று நெருங்கினார். இத்துடன் 4 தொடர் புள்ளிகளை வென்ற சிந்து 8-9 என்று நெருக்கினார். இந்நிலையில் சிந்து அடித்த ஷாட் ஒன்றை அருமையாகக் கணித்த மாரின் விட்டார் அவுட் ஆனது 10-8 என்று மாரின் முன்னிலை பெற்றார்

இப்போது மாரினின் உடலுக்கு நேராக ஒரு ஷாட்டை அற்புதமாக சிந்து அடித்து பிறகு ஒரு நீண்ட ராலியில் சிந்து வென்று 10-10 என்று ஆட்டம் சூடுபிடித்தது. அதாவது முனைகள் மாறும்போது மாரின் 11-10 என்று முன்னிலை வகித்திருந்தார். இந்நிலையில் சிந்து அறியாமல் சில பிழைகளைச் செய்தார், சில ஷாட்களை சோதனையாக முயற்சி செய்தார் இதனால் மாரின் 13-10 என்று முன்னிலை பெற்றார். அடுத்தடுத்து ஸ்மாஷ்கள் மூலம் மாரின் 15-11. கடைசியில் சிந்து 2 புள்ளிக்ளை பெற மாரின் ஒரு புள்ளியை பெற 16-13 என்று திரில்லிங் முடிவுக்குச் சென்றது. ஆனால் சிந்து மேலும் சில தவறுகளைச் செய்தார், மாரினின் ஸ்மாஷ்கள், இடது கை லாப்கள், ஸ்லைஸ்கள் சிந்துவுக்கு குழப்பம் விளைவிக்க உடல் மொழி தளர்ந்தது கடைசியில் 21-15 என்று மாரின் தங்கம் வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்