2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள்: ஃபிபா முடிவு

By ராய்ட்டர்ஸ்

ஃபிபா தலைவர் கியானி இன்ஃபாண்டினோ எடுத்த அதிக அணிகள் பங்கு பெறும் உலகக்கோப்பை கால்பந்து என்ற முடிவை ஃபிபா கவுன்சில் ஏகமனதாக ஆதரித்துள்ளது.

இதன்படி, 32 அணிகள் பங்கு பெறும் உலக்கோப்பை கால்பந்து 2026 முதல் 48 அணிகளாக அதிகரிக்கப்படும்.

அதாவது, 16 பிரிவுகளாகப் பிரித்து பிரிவுக்கு 3 அணிகள் என்று வகைசெய்யப்படும். இது குறித்த விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

செப் பிளாட்டர் மீதான முறைகேடுப் புகார்களை அடுத்து ஃபிபா தலைவராக பொறுப்பேற்றார் கியானி இன்ஃபாண்டினோ. அவர் உலகக்கோப்பையில் அதிக அணிகள் பங்கேற்க வழிவகை செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

இது வரை ஃபிபாவின் 211 உறுப்பு கால்பந்து நாடுகள் உலகக்கோப்பை வாய்ப்புகளை அரிதாகவே பெற்றுள்ளன. சில நாடுகள் உலகக்கோப்பையில் ஆடியதேயில்லை.

தற்போது ஃபிபாவின் இந்த முடிவு நடைமுறைப் படுத்தப்பட்டால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்