டெல்லியில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் பைனல் போட்டியில் 5 முதல் 8-வது இடங்கள் வரையிலான ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியைத் தோற்கடித்தது.
இந்தியத் தரப்பில் மன்தீப் சிங் ஹாட்ரிக் கோல் (18, 41, 53-வது நிமிடங்களில்) அடித்தார். ரூபிந்தர்பால் சிங் இரு கோல்களை அடித்தார். 2004-ல் பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஜெர்மனியைத் தோற்கடித்த இந்தியா, அதன்பிறகு இப்போது ஜெர்மனியைத் தோற்கடித்துள்ளது.
இந்திய அணி அடுத்ததாக 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது. 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி, ஆர்ஜென்டீனாவை சந்திக்கிறது. இந்த ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago