தென் ஆப்பிரிக்கா 191 ரன்கள் முன்னிலை

By ஏஎஃப்பி

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்கள் முன்னிலை பெற்றது.

டுனிடின் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களும், நியூஸிலாந்து அணி 341 ரன்களும் எடுத்தன. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது.

ஸ்டீபன் குக் ரன் ஏதும் எடுக் காமல் ஆட்டமிழந்தார். ஹசிம் ஆம்லா 23, டீன் எல்கர் 12 ரன்களுடன் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். ஆம்லா 24 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டுமினி 39 ரன்களிலும் வாக்னர் பந்தில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து எல்கருடன் இணைந்த கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் சிறப்பாக பேட் செய்தார். இருவரும் அரை சதம் அடித்தனர்.

டீன் எல்கர் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஜீத்தன் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டெம்பா பவுமா 6 ரன்களிலும், குயிண்டன் டி காக் 4 ரன்களிலும் நடையை கட்டினர். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 102 ஓவர்களில் 6 விக் கெட்கள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.

டு பிளெஸ்ஸிஸ் 56, பிலாண்டர் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 191 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை விளையாடுகிறது. இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்