ஆஸி. ஓபன்: செரீனா அதிர்ச்சி தோல்வி

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செரீனா 6-4, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் உலகின் 14-ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச்சிடம் தோல்வி கண்டார்.

18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பையும், தொடர்ச்சியாக 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வெல்லும் வாய்ப்பையும் இழந்தார் செரீனா. இதுவரை செரீனாவும், இவானோ விச்சும் 5 முறை மோதியுள்ளனர். இதில் முதல்முறையாக இவானோவிச் வெற்றி கண்டுள்ளார்.

இதற்கு முன்னர் செரீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு செட்டைக்கூட வெல்லாத அனா இவானோவிச் இந்த முறை அவருக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்துள்ளார். செரீனாவின் தொடர் வெற்றிக்கும் (25 வெற்றிகள்) முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவானோவிச் தனது காலிறுதியில் கனடாவின் யூஜீனி புச்சார்டை சந்திக்கவுள்ளார்.

மற்றொரு மகளிர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நா 6-2, 6-0 என்ற நேர் செட்களில் ரஷியாவின் மகரோவாவைத் தோற்கடித்தார். காலிறுதியில் இத்தாலியின் ஃபிளேவியா பென்னட்டை சந்திக்கிறார் லீ நா.

காலிறுதியில் ஜோகோவிச்

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் ஜோகோவிச் 6-3, 6-0, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். தொடர்ச்சியாக 28-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள ஜோகோவிச், காலிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை சந்திக்கிறார். வாவ்ரிங்கா 6-3, 7-6 (3), 7-6 (5) என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் டாமி ராபர்ட்டோவைத் தோற்கடித்தார்.

3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெரர் 6-7 (5), 7-5, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் புளோரியன் மேயரைத் தோற்கடித்தார். ஃபெரர் தனது காலிறுதியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார். பெர்டிச் 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார்.

காலிறுதியில் பயஸ் ஜோடி

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஜோடி தங்களின் 3-வது சுற்றில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியைத் தோற்கடித்தது. பயஸ் ஜோடி தங்களின் காலிறுதியில் பிரான்ஸின் மைக்கேல் லோட்ரா-நிகோலஸ் மஹுத் ஜோடியை சந்திக்கிறது.

கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ்-ஸ்லோவேகியாவின் ஹன்ட்சோவா ஜோடி தங்களின் முதல் சுற்றில் 7-5, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் அஜா டாம்ஜானோவிக்-ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த் ஜோடியைத் தோற்கடித்தது.

பயஸ் ஜோடி அடுத்த சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரஷியாவின் எலினா வெஸ்னினா ஜோடியை சந்திக்கிறது. பூபதி ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-7 (3), 6-4, 10-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் அரன்ட்ஸ்கா-டேவிட் மெரேரோ ஜோடியை வீழ்த்தியது.

இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தானின் குரேஷி ஜோடி 3-வது சுற்றில் தோல்வி கண்டது. இந்த ஜோடி 4-6, 6-7 (1) என்ற நேர் செட்களில் பிலிப்பின்ஸின் டிரெட் ஹாய்-பிரிட்டனின் டொமினிக் இங்லாட் ஜோடியிடம் தோல்வி கண்டது. !

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்