புனே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எதிர்த்து இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு அதிர்ச்சிகரமாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது.
ஆஸ்திரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓகீஃப் 24 பந்துகளில் 6 விக்கெட்டுகளைச் சாய்த்ததன் மூலம் 94/3 என்று இருந்த இந்திய அணி அதிர்ச்சிகரமாக அடுத்த 11 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த குழி பிட்சில் 155 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையைப் பெற்றது. 64 ரன்கள் எடுத்து அருமையாக ஆடி வந்த கே.எல்.ராகுல், ஸ்டீபன் ஓகீஃப் பந்தில் ஆடிய மோசமான ஷாட்டினால் இந்திய அணி சரிவு தொடங்கியது. ஓகீஃப் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு 24 பந்துகளில் அவர் இந்த சரிவை உண்டாக்கி ஆஸ்திரேலியாவுக்கு அருமையான, அரிதான ஒரு வெற்றி வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்.
ஒரே ஓவரில் ஓகீஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதிலிருந்து இந்த சரிவு தொடங்கியது, முதலில் கே.எல்.ராகுல் படுமோசமாக ஒரு ஸ்லாக் செய்ய அது லாங் ஆஃபில் டேவிட் வார்னரால் கேட்ச் எடுக்கப்பட்டது. 2 பந்துகள் சென்று அஜிங்கிய ரஹானே (13) செய்த எட்ஜ் 2-வது ஸ்லிப்பில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்பினால் அருமையாக பிடித்துப் போடப்பட்டது. இன்னும் 2 பந்துகள் சென்று ஓகீஃபின் ஸ்பின்னை சமாளிக்க முடியாமல் சஹா எட்ஜ் செய்ய முதல் ஸ்லிப்பில் ஸ்மித் அருமையாக பிடித்தார். 94/3 என்ற நிலையிலிருந்து ஒரே ஓவரில் 95/6 என்று ஆனது இந்திய அணி.
அஸ்வின் விக்கெட்டை நேதன் லயன் வீழ்த்தினார், அஸ்வின் தடுத்தாடிய பந்து காலில் பட்டு ஹேண்ட்ஸ்கம்பிடம் செல்ல அவர் முன்னால் டைவ் அடித்து வலது கையினால் கேட்ச் எடுத்தார்.
ஜெயந்த் யாதவ் ஸ்பின்னை சமாளிக்க முடியாமல் ஆடிவந்த நிலையில் முன்னால் சற்று கூடுதலாக வந்து தடுத்தாட நினைத்தார், ஓகீஃப் வீசிய அந்தப் பந்து மட்டையைக் கடந்து விக்கெட் கீப்பரிடம் செல்ல வேட் அதனை ஸ்டம்ப்டு செய்தார். இந்நிலையில் நின்று கவிழும் படகை நிலைநிறுத்த முயலாமல் ரவீந்திர ஜடேஜா, ஓகீஃப் பந்தை மேலேறி வந்து டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். ஸ்டாக் அதனை விடுவாரா? உமேஷ் யாதவ், ஓகீஃப் பந்தை எட்ஜ் செய்ய இந்திய இன்னிங்ஸ் 105 ரன்களில் முடிந்தது. ஓகீஃப் 35 ரன்களுக்கு 6 விக்கெட்.
முன்னதாக ஆஸ்திரேலியா இன்று 256/9 என்ற நிலையில் தொடங்கி அஸ்வின் ஓவரில் ஸ்டார்க்கின் ஒரு மிட் ஆன் பவுண்டரியுடன் முடிந்தது, அதே ஓவரில் டீப்பில் கேட்ச் கொடுத்து ஸ்டார்க் வெளியேற ஆஸ்திரேலியா 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணியைப் போலவே மிட்செல் ஸ்டார்க்குடன் ஓகீஃப் தொடங்கினார், ஆனால் முதல் விக்கெட் ஹேசில்வுட்டால்தான் வீழ்த்த முடிந்தது. விஜய்க்கு அவர் 3இன்ஸ்விங்கர்களை வீசி அதே லெந்தில் ஒரு பந்தை வெளியே கொண்டு சென்றார், தனது ஆஃப் ஸ்டம்ப் எங்கு உள்ளது என்பதில் விஜய் கவனமாக இருந்தாலும் அதனை தொட்டார், கெட்டார். பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஒரு அருமையான முடிவில் மிட்செல் ஸ்டார்க்கை கொண்டு வர புஜாரா சற்றும் எதிர்பாராத வகையில் விளையாட முடியாத ஒரு எழுச்சிப் பந்தை வீசினார் பந்து அதுவாகவே புஜாராவின் உயர்த்திய கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது.
2 பந்துகள் கழித்து ஆஸ்திரேலியா எதிர்பார்த்த கனவு விக்கெட்டை ஸ்டார்க் வீழ்த்தினார், விராட் கோலி, வெளியே சென்ற பந்தை, ஆடத் தேவையில்லாத பந்தை அவரது ‘ராஜ கவர் டிரைவுக்காக’ முயன்று எட்ஜ் செய்தார். விராட் கோலி ஸ்கோரரை தொந்தரவு செய்யவில்லை.
155 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தேநீர் இடைவேளையின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது, ஸ்மித் 27 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கம்ப் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக வார்னர், ஷான் மார்ஷ் ஆகியோர் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.
முதல்நாளே குழி பிட்ச் போட்டால் என்ன ஆகும் என்ற பலனை இந்திய அணி அனுபவித்து வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago