ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வி: வரலாறு படைத்த இலங்கை அணி

By இரா.முத்துக்குமார்

33 ஆண்டுகால இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வீழ்த்தியிருந்த இலங்கை அணி இன்று டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றி ஆஸி.க்கு ஒரு ஒயிட்வாஷ் அதிர்ச்சியை அளித்து புதிய வரலாறு படைத்தது.

இதன் மூலம் இப்போதைக்கு இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது, ஆனால் இதனைத் தக்கவைக்க போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் டெஸ்ட்டிலும் இந்தியா வெல்வது அவசியம். ஆஸ்திரேலியா முதலிடத்திலிருந்து 3-ம் இடத்துக்கு சரிந்தது. 10 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று இலங்கை அணி தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ளது.

5-ம் நாளான இன்று 312/8 என்று தொடங்கிய இலங்கை 347/8 என்று டிக்ளேர் செய்தது., இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 324 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 2-வது இன்னிங்சிலும் அற்புதன் ரங்கனா ஹெராத் அபாரமாக வீசி 64 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 45-வது ஓவரில் ஆஸ்திரேலியா 160 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்ததோடு, முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒயிட்வாஷ் தோல்வி கண்டது. ஹெராத் முதல் இன்னிங்ஸிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடரில் ஹெராத் 28 விக்கெட்டுகளை 12.75 என்ற சராசரியில் வீழ்த்தியுள்ளார்.

இலங்கை உருவாக்கிய அந்நாட்டு கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த பேட்ஸ்மென் சங்கக்காரா 134 டெஸ்ட் போட்டிகளில் ஆடியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் வெற்றியைக் கூட அவர் தன் கிரிக்கெட் வாழ்வில் கண்டதில்லை. ஆனால் முற்றிலும் புதிய வீரர்களுடன் ஆடும் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்து அதிர்ச்சியளித்துள்ளது.

டேவிட் வார்னர் அருமையாக விளையாடி 94 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 68 ரன்கள் எடுக்க 26 ஓவர்களில் 100/1 என்ற நிலையில் வெற்றியை நோக்கி ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்த்தபோது, ஹெராத் புகுந்து வரிசையாக காலி செய்தார்.

324 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஷான் மார்ஷ் 23 ரன்கள் எடுத்து உணவு இடைவேளைக்கு சற்று முன் திலுருவன் பெரேராவின் லெக் ஸ்டம்ப் பந்தை பின்னால் சென்று ஆடுவதற்குப் பதிலாக முன்னால் வந்து ஆடியதால் பந்து கூடுதல் பவுன்சில் கிளவ்வில் பட்டு ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது. ஸ்மித் ஆக்ரோஷம் என்ற பெயரில் தனது ஸ்பின் பலவீனத்தை தொடர்ந்து மறைக்க மேற்கொண்ட முயற்சி இப்போது பலனளிக்கவில்லை, ரங்கனா ஹெராத் ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை குட் லெந்தில் போட முன்னால் வந்து ஆட வேண்டிய பந்தை பின்னால் சென்று கட் அடிக்க முயன்றார், அவர் ஒதுங்க ஒதுங்க பந்தும் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது, கட் ஷாட் மிஸ் ஆனது பவுல்டு ஆனார்.

அதே ஓவரின் கடைசி பந்தில் ஆடம் வோஜஸ், நேர் பந்தை கால்காப்பில் வாங்கினார், பந்தின் கோணத்தைக் கணிக்காமல் தவறான லைனில் ஆடி எல்.பி. ஆனார்.

68 ரன்கள் எடுத்த வார்னரை அவரது லெக் திசையில் பிட்ச் செய்து பவுல்டு செய்தார் பெரேரா. ஹென்ரிக்ஸ் 4 ரன்களில் பெரேரா பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்றார் பெரேரா அவர் ஷாட்டுக்கு வாகாக வீசாமல் பந்தை உள்ளே வீச பேடில் பட்டு ஸ்லிப்பில் சென்றது, அங்கு கேப்டன் மேத்யூஸ் பந்தை எடுத்து நேராக் ஸ்டம்பில் அடிக்க ரன் அவுட் ஆனது. மிட்செல் மார்ஷ் இறங்கி 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் லெக் அண்ட் மிடிலில் பிட்ச் ஆன பந்து திரும்பி மார்ஷின் எட்ஜைத் தட்டிச் சென்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது, ரெங்கனா ஹெராத் மார்ஷை வெளியேற்றினார்.

விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் ஆஃப் ஸ்டம்புக்கு மிக வெளியே சென்ற பந்தை ஸ்வீப் செய்ய முயன்று டாப் எட்ஜ் ஆகி மேத்யூஸ் மீண்டும் விக்கெட் கீப்பருக்குப் ப்பின்னால் கேட்ச் ஆக்கினார்.

ஸ்டார்க் இறங்கி 2 பவுண்டரி 1 சிக்சர் என்று உற்சாகமாக ஆடி ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று ஹெராத்தின் 5-வது விக்கெட்டாக காலியானார். ஹேசில்வுட் ஹெராத்தின் அருமையான ஒரு பந்து பேட் மற்றும் பேடு இடைவெளியில் புகுந்து செல்ல ஸ்டம்ப்டு ஆனார். நேதன் லயன் கடைசியாக 12 ரன்களில் ஹெராத்திடம் எல்.பி. ஆகி வெளியேறினார். ஆஸ்திரேலியா 160 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டு 0-3 என்று ஒயிட்வாஷ் ஆனது.

துணைக்கண்டத்தில் பாகிஸ்தான், இந்தியா, தற்போது இலங்கை ஆகிய அணிகளிடம் ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது, இன்னும் வங்கதேசம் பாக்கியுள்ளது.

முதல் டெஸ்ட் முதல்நாளில் இலங்கையை 117 ரன்களுக்குச் சுருட்டியது, இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றது தவிர ஆஸ்திரேலியாவுக்கு நினைவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு இந்தத் தொடரில் எதுவும் இல்லை.

மிட்செல் ஸ்டார்க் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆசியாவில் 20 விக்கெட்டுகளுக்கு மேல் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கைப்பற்றிய முதல் ஆஸி. வேகப்பந்து வீச்சாளரானார்.

தொடர் நாயகனாக ரங்கனா ஹெராத் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்