கனடாவுடன் டிரா செய்த இந்திய ஹாக்கி அணி காலிறுதியில் பெல்ஜியத்தை சந்திக்கிறது

By ஆர்.முத்துக்குமார்

ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் கனடாவுடன் டிரா செய்து, காலிறுதியில் பிரிவு ஏ டாப் அணியான பெல்ஜித்தைச் சந்திக்கிறது.

கனடா அணியின் கோல் கீப்பர் டேவிட் கார்ட்டரின் அபாரமான கோல் கீப்பிங்கினால் இந்திய அணிக்கு கிடைத்த நெருக்கமான வாய்ப்புகளும் திறமையாக முறியடித்தனர், கடைசியில் கோல் கீப்பர் இல்லாமல் ஆடி வெற்றி பெற முயன்ற இந்திய அணி ஆடிய விதம் எங்கு கனடாவுடன் தோற்று விடுமோ என்ற அச்சத்தைத்தான் ஏற்படுத்தியது. இந்நிலையில் காலிறுதியில் பெல்ஜியம்!!

அர்ஜெண்டினா அணி அயர்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 3-ம் இடத்தைப் பிடித்தது.

கனடாவுக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். ஆனால் வெற்றி பெறுவதற்கு இது போதுமானதாக இல்லை.

இந்திய அணியினர் நிறைய கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும் கனடாவின் டேவிட் கார்ட்ட்ரின் கோல் கீப்பிங்கும், அசுரத் தடுப்பும் இந்தியாவை எழும்பவிடாமல் செய்தது. கனடா அணியினர் தங்கள் பகுதியிலேயே விளையாடி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது பந்து தங்களுக்குக் கிடைத்த போது எதிர்த்தாக்குதல் செய்து அச்சுறுத்தினர். இவ்வகையில் இந்திய அணி இருமுறை கோல் வாங்காமல் தப்பித்தது.

முதல் 2 கால்மணி நேர ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது முதலில் 8-வது நிமிடத்தில் நிகின் அடித்த ரிவர்ஸ் ஷாட் கார்ட்டரால் தடுக்கப்பட்டது. 5 நிமிடங்கள் கழித்து நிகின் முயற்சியை வெளியே வந்து முறியடித்தார் இதே கார்ட்டர்.

முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பை ரகுநாத் கோல் நோக்கி அடித்த போதும் கனடா தடுப்பாட்ட வீரர் குறுக்கே புகுந்து காப்பாற்றினார்.

இதற்கடுத்ததாக எதிர்த்தாக்குதலில் கனடா வீரர் மேத்யூ கெஸ்ட் மார்க் செய்யப்படாததால் வந்த பந்தை விறுவிறுவென எடுத்துச் செல்ல ஒரு தருணத்தில் ஸ்ரீஜேஷும் அவரும் மட்டுமே எதிரெதிரே இருந்தனர், ஆனால் இவர் அடித்த ரிவர்ஸ் ஹிட் வெளியே சென்று இந்தியர்களுக்கு நிம்மதி அளித்தது.

18-வது நிமிடத்தில் மன்பிரீத் சிங், உத்தப்பா கூட்டணி அமைத்து கனடா வட்டத்துக்குள் ஊடுருவினர், இம்முறையும் மன்ப்ரீத் அடித்த ரிவர்ஸ் ஷாட்டை மிக அருமையாக கனடா கோல் கீப்பர் கார்ட்டர் தடுத்தார். இதற்கு சில நிமிடங்கள் கழித்து எஸ்.வி.சுனில் காயமடைந்து ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார், இது பின்னடைவை ஏற்படுத்தியது.

இடைவேளைக்குப் பிறகு 2 நிமிடங்களில் ஒரு மூவில் இந்தியாவுக்கு ஷார்ட் கார்னர் கிடைத்தது, இம்முறையும் ஹர்மன்ப்ரீத் அடித்த ஷாட்டை கார்ட்டர் தடுத்தார் ஆனால் திரும்பி வந்த பந்தை அகாஷ்தீப் கோலாக மாற்ற இந்தியா 1-0 என்று முன்னிலை. ஆனால் மகிழ்ச்சி நீடிக்கவில்லை, சில விநாடிகளிலேயே எதிர்த்தாக்குதல் தொடுத்த கனடா பெனால்டி வாய்ப்பை பெற அந்த அணியின் டப்பர் கோல் அடித்து சமன் செய்தார்.

ஆனால் இந்தியா விடாமல் கோல் முயற்சியில் ஈடுபட்டது. 41-வது நிமிடத்தில் ரகுநாத்தின் அருமையான பாஸ் கனடாவின் தடுப்பு வீரர்களை பிரிக்க பந்தை ரமந்தீப் சிங் அருமையாக கோலாக மாற்றி முன்னிலை கொடுத்தார். கனடாவும் உடனேயே பெனால்டி வாய்ப்பு பெற்றது, ஆனால் இம்முறை டப்பரின் அடியை ஸ்ரீஜேஷ் அருமையாகத் தடுத்தார்.

மீண்டும் 4-வது கால் மணி ஆட்டம்தான் இந்தியாவுக்கு எமன் ஆனது. ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருந்த போது கனடாவுக்கு தேவையில்லாமல் பெனால்டி கிடைக்கச் செய்தது இந்திய அணி. நிகின் தேவையில்லாமல் ஒரு ஃபவுல் செய்ய அது அவரை சஸ்பெண்ட் செய்ததோடு கனடாவுக்கு சமன் கோலை அளிக்கும் ஷார்ட் கார்னராகவும் அமைந்தது. டப்பர் மீண்டும் கோல் அடித்தார், 2-2 என்று சமன்.

கடைசியில் ஸ்ரீஜேஷ் வெளியே சென்று 11 பேருடன் முழுவீச்சு தாக்குதல் ஆட்டம் ஆடியும் கனடாவின் தடுப்புறுதியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்