2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தான் விக்கெட் எடுக்காவிட்டாலும் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்றால் அதுவே போதுமானது என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
"ஊக்கமளிக்கக் கூடிய வீரர்களான டிவிலியர்ஸ், வெர்னன் பிலாண்டர் ஆகியோரிடையே ஆடுவதே சிறந்தது. டிவிலியர்ஸ், ஆம்லா பேட் செய்வதைப் பார்ப்பது, வெர்னன் பிலாண்டர், மோர்னி மோர்கெல் சிறப்பாக ஆடுவதைப் பார்ப்பதே நம்மை ஒரு சிறந்த வீரராக மாற்றும்.
நான் இவர்களை விட சிறந்தவனாக விரும்பவில்லை, வெற்றி அணியில் அவர்களுடன் இருந்தால் போதும். நான் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் முடிந்து போனாலும் கோப்பையை வென்றால் எனது கழுத்தைச் சுற்றி பதக்கம் கிடைக்கும். அதுவே போதும்.
2015 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி அபாயகரமானது. பெரிய போட்டித் தொடர்களில் அவர்கள் எப்போதும் அபாய அணி. ஆஸ்திரேலியா சிறந்த அணி, அவர்கள் எப்போதும் உங்கள் முன் வந்து நின்று கொண்டேயிருப்பார்கள், இது ஒரு பெரிய எரிச்சல்தான். 3 ஆண்டுகளுக்கு ஒன்றுமில்லாமல் இருக்கும் அணி நியூசிலாந்து ஆனால் உலகக் கோப்பை என்றால் உடனே அந்த அணி தலைநிமிரும்” என்று கூறியுள்ளார் ஸ்டெய்ன்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
6 days ago