ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் ரபேல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இத்தாலியின் ரோம் நகரில் நடை பெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், தனது சகநாட்டை சேர்ந்த 73-ம் நிலை வீரரான நிக்கோலஸ் அல்மேக்ரோவை எதிர்த்து விளையாடினார்.
இதில் முதல் செட்டில் நடால் 3-0 என முன்னிலை வகித்த போது இடது முழங்காலில் காயம் அடைந்த அல்மேக்ரோ ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். 24 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ரோம் மாஸ்டர்ஸ் தொடரில் நடாலின் 50-வது வெற்றியாக இது அமைந்தது. இந்த சீசனில் களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெற்ற மான்டே கார்லோ, பார்சிலோனா, மாட்ரிட் ஓபனில் பட்டம் வென்றுள்ள நடால், தற்போது இந்த தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
வெற்றி குறித்து நடால் கூறும்போது, “சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டில் நான் அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளேன். ஆட்டத்துக்கு ஆட்டம் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்தான்.
ஆனால் ஒன்று, மற்றொன்றைவிட சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறு வதற்கு இது சரியான நேரம் இல்லை. மேலும் ஆட்டத்தில் முன்னேற்றம் காண எப்போதுமே உந்துதல் வேண்டும்” என்றார்.
நடால் 3-வது சுற்றில் 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜேக் ஷாக்குடன் மோதுகிறார். மற்ற ஆட்டங்களில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் 44-ம் நிலை வீரரான பிரான்சின் பெனோயிட் பேரையும், 5-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் டாமி ஹாஸையும் வீழ்த்தினர்.
7-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷி கோரி 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் 30-ம் நிலை வீரரான டேவிட் பெரரையும், 7-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் 23-ம் நிலை வீரரான உருகுவேயின் பப்லோ குயவாஸையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
கெர்பர் தோல்வி
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 0-6 என்ற நேர் செட்டில் 68-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவை சேர்ந்த அனெட் கான்டவிட்டிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 56 நிமிடங்களில் முடிவடைந்தது.
2-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-1, 6-1 என்ற நேர் செட்டில் 27-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் லாரன் டேவிசையும், 4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் லாரா ஷெய்ஜ் முன்டையும், 8-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-4, 7-6 (13-11) என்ற செட் கணக்கில் 42-ம் நிலை வீராங்கனையான பிரான்சின் அலிஸ் கார்னெட்டையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பிரெஞ்சு ஓபன் சாம்பியனும் 7-ம் நிலை வீராங்கனையுமான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீராங்கனையான லத்வியாவை சேர்ந்த ஜெலினா ஒஸ்டபெங்கோவை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago