தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர்

By பிடிஐ

'தூய்மை இந்தியா' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பினை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்றுக்கொண்டார்.

அக்டோபர் 2-ஆம் தேதி 'ஸ்வச் பாரத்' என்ற திட்டம், நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, அதில் பங்கேற்க முன்வருமாறும் 9 பிரபலங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தத் திட்டத்தில் பங்கேற்க உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, "பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்த ஸ்வச் பாரத் என்ற தூய்மை திட்டத்தில் நானும் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ளேன். நானும் என்னுடன் சில இளைஞர்களும் இணைந்து எங்கள் பகுதியில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளோம்.

நாம் அனைவரும் இதற்காக செயல்பட வேண்டும். எனது தலைமையை ஏற்று எனது நண்பர்களும் அறிந்தவர்களும் செயல்படுவார்கள். நாம் அனைவரும் இதனை முன்னெடுத்துச் சென்றால் தூய்மையான இந்தியாவை விரைவில் உண்டாக்கலாம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்