49 ரன்களுக்குச் சுருண்டு கோலியின் ஆர்சிபி அணி அதிர்ச்சித் தோல்வி: கொல்கத்தாவுக்கு மிகப்பெரிய வெற்றி

By இரா.முத்துக்குமார்

ஐபிஎல் கிரிக்கெட்டின் மிகக்குறைந்த ரன் எண்ணிக்கையான 49 ரன்களுக்குச் சுருண்டு கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா அணிக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்தது.

வெற்றிக்குத் தேவை 132 ரன்கள். ஆர்சிபி அணியில் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோர் ஆடுகின்றனர்.

ஆனால் ஒரு வீரர் கூட இரட்டை இலக்கம் எட்டவில்லை. ஆர்சிபி வீரர்கள் ஸ்கோர் இதோ: 7, 0, 1, 8, 9, 8, 2, 0, 2, 5, 0. உதிரிகள் 7. மொத்தம் 9.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 49 ரன்களையே எடுத்தது ஆர்சிபி. 49 என்பது ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகக்குறைந்த ஸ்கோர், மொத்தமாக டி20-யில் 10-வது மிகக்குறைந்த ஸ்கோர்.

அதேபோல் 131 அல்லது இதற்கும் குறைவான ரன் எண்ணிக்கையுடன் ஒரு அணி 10-வது முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா அணியில் மீண்டும் சுனில் நரைன் 17 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 34 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கொடுக்க இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் விரைவில் 50 ரன்களை எட்டிய பெருமை கண்டது கொல்கத்தா,

65/1 என்ற நிலையிலிருந்து கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 131 ரன்களுக்குச் சுருண்டது. சுனில் நரைன் அதிக ரன் எடுத்தவரானார். மீண்டும் யஜுவேந்திர சாஹல் 4 ஓவர் 16 ரன்கள் 3 விக்கெட் என்று அசத்தினார். மில்ஸ், நெகி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலக்கைத் துரத்திய ஆர்சிபி அணியின் கோலி, டிவில்லியர்ஸ், கேதர் ஜாதவ் ஆகியோரை தன் முதல் 3 ஓவர்களில் நேதன் கூல்ட்டர் நைல் காலி செய்தார். அதுவும் கோலி கோல்டன் டக். அதன் பிறகு பிற வேகப்பந்து வீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ், கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஏற்கெனவே உதிர்ந்து விழுந்த ஆர்சிபி அணியை தூளாக்கினர். உமேஷ் யாதவ், மந்தீப் சிங் விக்கெட்டை வீழ்த்த அனைத்து விக்கெட்டுகளும் வேகப்பந்துக்கு விழுந்தது. இப்படி நடப்பது ஐபிஎல் கிரிக்கெட்டில் 5-வது முறை.

முதலில் பிட்ச் பற்றி குறிப்பிட்ட கோலி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றார், ஆனால் தொடங்கியதோ சாமுவேல் பத்ரியை வைத்து, இவரை முழுதும் பார்த்திருந்த சுனில் நரைன் வெளுத்துக் கட்ட முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் 1 சிக்சர். 17 பந்தில் 34 எடுத்து ஸ்டூவர்ட் பின்னியிடம் வீழ்ந்தார். நரைனுக்குப் பிறகு கொல்கத்தா பேட்டிங்கும் சொல்லிக் கொள்ளும் படியில்லை, கடைசியில் கிறிஸ் வோக்ஸ் 18 ரன்கள் எடுக்க கொல்கத்தா 131 ரன்களை எட்டியது.

அதி அற்புத வேகப்பந்து வீச்சு: கம்பீர் ஆக்ரோஷ கேப்டன்சி

சிறிய இலக்கு என்பதால் நிகர ரன் விகிதத்தை ஏற்றிக் கொள்ள பெங்களூரு எண்ணம் கொண்டிருந்தது. ஆனால் கொல்கத்தா வேகப்பந்து வீச்சும் கம்பீரின் ஆக்ரோஷமான பீல்டிங் வியூகமும் வேறு விதமான அனுபவத்தை கோலி அணிக்கு கொடுத்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கூல்டர் நைல் மிகப்பெரிய நோபாலுடன் தொடங்கினார், பிரீ ஹிட்டில் கெய்ல் தோள்பட்டையைப் பதம் பார்த்தார். கோலி முதல் பந்தை எதிர்கொண்ட போது கோலியைப் பற்றி நன்றாகத் தெரிந்தே 2-வது ஸ்லிப்பை வைத்திருந்தார். அவுட் ஸ்விங்கர்... கோலி முறையாக எட்ஜ் செய்தார். 2-வது ஸ்லிப்பில்தான் கேட்ச் ஆனது.

இன்னொரு முனையில் மந்தீப் சிங்கை, உமேஷ் யாதவ் பாயிண்டில் கேட்ச் கொடுக்க வைத்தார். கொல்கத்தா அணி வீச்சாளர்கள் உண்மையில் நல்ல வேகம் காட்டினர். டிவில்லியர்ஸ் 2 பவுண்டரிகள் அடித்தார், ஆனால் கூல்ட்டர் நைல் மிகச்சரியாக ஒரு பவுன்சரை வீச டிவில்லியர்ஸ் ஹூக் டாப் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் உத்தப்பாவினால் கேட்ச் பிடிக்கப்பட்டது. கம்பீர் பைன் லெக்கை உஷார் படுத்தினார் அதாவது இன்னொரு பவுன்சர் என்றவாறு... ஆனால் அதன் சமிக்ஞைக்கு வேறு அர்த்தம் போலும், கூல்டர் நைல் இன்ஸ்விங்கரை வீச ஜாதவ் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்னொரு முனையில் கிறிஸ் கெய்லை ஷார்ட் பிட்ச் உத்தியில் உமேஷ் யாதவ் படுத்தி எடுத்தார். 17 பந்துகளில் ஒரே பவுண்டரியுடன் 7 ரன்கள் மட்டுமே எடுத்து கெய்ல் கட்டுப்படுத்தப்பட்டார். வோக்ஸ் வந்த போது ஷார்ட் பிட்ச் பந்தினால் வெறுப்படைந்த கெய்ல் வீழ்ந்தார். மீதி விக்கெட்டுகள் ஊர்வலமே. கூல்டர் நைல், வோக்ஸ், கிராண்ட்ஹோம் தலா 3 விக்கெட்டுகள். ஆட்ட நாயகனாக கூல்ட்டர் நைல் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்