ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக திகழும் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஆவார். இதனை ஐபிஎல் லீக் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ரூ.12.5 கோடிக்குத்தான் விராட் கோலியின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் ராயல் சாலஞ்சர்ஸ் அணி உரிமைதாரர் கோலிக்கு கொடுக்கும் தொகையோ ரூ.15 கோடி. அதே போல் கிறிஸ் கெய்லுக்காக செலவிடப்பட்ட ரூ.7 கோடியே 50 லட்சத்தைக் காட்டிலும் கூடுதலான தொகையாக அவருக்கு ரூ.8 கோடியே 40 லட்சம் கொடுக்கிறது.
தோனிதான் ஐபிஎல் கிரிக்கெட்டில் செலவு மிக்க வீரர் என்று நம்பப்பட்டது. ஆனால் தோனியின் ஊதியம் 12,50,00,000. ஷிகர் தவணும் இதே தொகையைத்தான் வருவாயாகப் பெறுகிறார்.
ஆனால், கவுதம் காம்பீர், ரோஹித் சர்மா உள்ளிட்ட சில வீரர்கள் அவர்களை ஒப்பந்தம் செய்த தொகையைவிடக் குறைவாகவே பெறுகின்றனர். ரோஹித் சர்மா ரூ.12.5 கோடிக்கு எதிராக ரூ.11.50 கோடி வருவாய் ஈட்டுகிறார்.
காம்பீரும் ரூ.12.5 கோடிக்கு பதிலாக ரூ.10 கோடியே ஈட்டுகிறார். மாறாக விராட் கோலி, கிறிஸ் கெயில் போல் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்பஜன் சிங் ரூ.5.5 கோடிக்கு பதிலாக பெறும் தொகையோ ரூ.8 கோடியாகும். அம்பாத்தி ராயுடுவும் ரூ.4 கோடிக்கு பதிலாக ரூ.6 கோடி ஊதியம் பெறுகிறார். மலிங்கா ரூ.7.5 கோடிக்கு பதிலாக ரூ.8.1 கோடி ஊதியம் பெறுகிறார்.
ஐபிஎல் வீர்ர்கள் சிலரின் ஊதிய விவரம்:
விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் - ரூ.15 கோடி
தோனி - டீம் புனே - ரூ.12.5 கோடி
டேவிட் மில்லர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ.5 கோடி
மனன் வோரா - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ.35 லட்சம்
கவுதம் காம்பீர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.10 கோடி
சுனில் நரைன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.8 கோடி
ரோஹித் சர்மா - மும்பை இந்தியன்ஸ் - ரூ.11.5 கோடி
பொலார்ட் - மும்பை இந்தியன்ஸ் - ரூ.9.70 கோடி
லஷித் மலிங்கா - மும்பை இந்தியன்ஸ் - ரூ.8.10 கோடி
ஹர்பஜன் சிங் - மும்பை இந்தியன்ஸ் - ரூ.8 கோடி
அம்பாத்தி ராயுடு - மும்பை இந்தியன்ஸ் - ரூ.6 கோடி
ஏ.பி.டிவில்லியர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் - ரூ.9.50 கோடி
கிறிஸ் கெயில் - ராயல் சாலஞ்சர்ஸ் - ரூ.8.40 கோடி
ஷிகர் தவண் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ.12.5 கோடி
அஜிங்கிய ரஹானே - டீம் புனே - ரூ.8 கோடி
அஸ்வின் - டீம் புனே - ரூ.7.5 கோடி
ஸ்டீவன் ஸ்மித் - டீம் புனே - ரூ.4 கோடி
டுபிளெஸ்ஸிஸ் - டீம் புனே - ரூ.4.75 கோடி
சுரேஷ் ரெய்னா - டீம் ராஜ்கோட் - ரூ.9.5 கோடி
ரவீந்திர ஜடேஜா - டீம் ராஜ்கோட் - ரூ.5.5 கோடி
பிரெண்டன் மெக்கல்லம் - டீம் ராஜ்கோட் - ரூ.3.25 கோடி
ஜேம்ஸ் பாக்னர் - டீம் ராஜ்கோட் - ரூ.5.10 கோடி
டிவைன் பிராவோ - டீம் ராஜ்கோட் - ரூ.4 கோடி
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago