முழங்கை காயத்திற்காக அடுத்த வாரத் தொடக்கத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடர் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடர் ஆகியவற்றிலிருந்து டிவில்லியர்ஸ் விலகியுள்ளார்.
தொடர்ந்து நீடித்து வரும் முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை தவிர வேறு சிகிச்சைகள் பலனளிக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு 8 முதல் 10 வாரங்கள் கழித்தே டிவில்லியர்ஸினால் மீண்டும் ஆட முடியும், உத்தேசமாக டிசம்பரில் இலங்கைக்கு எதிரான தொடரில் மீண்டும் டிவில்லியர்ஸ் ஆடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் (செப்.30) தென் ஆப்பிரிக்காவில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் டிவில்லியர்ஸ் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago