இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சி குறித்த உயர்மட்ட கூட்டத்தில் தோனி, விராட் கோலி பங்கேற்பு

By இரா.முத்துக்குமார்

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக பொறுப்பேற்றதையடுத்து அடுத்த ஓராண்டுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் திட்டமிடுதல் குறித்த உயர் மட்ட குழு கூட்டத்தில் விராட் கோலி, தோனி ஆகியோர் பங்கேற்றனர்.

ஞாயிறன்று பெங்களூருவில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் அனில் கும்ப்ளே, தோனி, விராட் கோலி, ராகுல் திராவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் தவிர இந்திய ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளின் பயிற்சியாளர்கள், சந்தீப் பாட்டீல், ஜூனியர் அணி தேர்வுக்குழு தலைவர் வெங்கடேஷ் பிரசாத், டபிள்யூ.வி.ராமன், ஹிர்வாணி (தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் மற்றும் ஸ்பின் பயிற்சியாளர்கள்), உடற்தகுதி பயிற்சியாளர் பேட்ரிக் பராஹத், தேசிய கிரிக்கெட் அகாடமி உடற்கூறு பயிற்சியாளர் ஆண்ட்ரூ லெய்பஸ், இந்திய ட்ரெய்னர் சங்கர் பாசு, பிச்சிஐ ஜெனரல் மேனேஜர் எம்.வி.ஸ்ரீதர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்திய அணியை அனைத்து வடிவங்களிலும் முதலிடம் பெறச் செய்ய உதவிப் பயிற்சியாளர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும், உள்நாட்டு கிரிக்கெட் நடைமுறைகள், இந்தியா ஏ தொடர்கள், காயங்கள், வீரர்களின் பணிச்சுமை, அணியை வலுப்படுத்துவதற்கான காரணிகள், ஆகியவை காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக பிசிசிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.

அனில் கும்ப்ளே கூறும்போது, “இங்கு நாங்கள் ஒரே திட்டம், ஒரே குறிக்கோளுக்காக கூடியுள்ளோம். இந்திய கிரிக்கெட்டின் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்வதில் நம்முடைய செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியே இந்தக் கூட்டம். இதற்காக நாங்கள் அனைவரும் ஒரே யூனிட்டாக செயல்படவிருக்கிறோம்” என்றார்.

இதில் விராட் கோலியும், தோனியும் வீரர்களின் உடல்தகுதி அறிக்கைகள் மிகச்சரியாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். அதாவது அரைகுறை உடல்தகுதியுடன் தொடரில் தேர்வாவது சரியல்ல என்றும் தொடருக்கு முன்பாகவே உடற்தகுதியின் உச்சத்தில் வீரர்கள் இருப்பது அவசியம் என்பதை இருவரும் வலியுறுத்தியதாக தெரிகிறது.

எந்த பங்காற்றவும் தயார்: ஸ்டூவர்ட் பின்னி

இந்தியாவில் விளையாடுவது எனக்கு கடினமான ஒன்று, ஆனால் வெளிநாட்டுத் தொடர்களில் எனக்கு அளிக்கப்படும் பங்கை சிறப்பாக செய்ய முடிந்துள்ளது. நான் 7 அல்லது 8ம் நிலையில் களமிறங்குவேன். அதாவது கூடுதல் பவுலர் அணியில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து என் பங்கு மாறுபடும். பிட்சில் புற்கள் இருக்குமேயானால் நான் 3-வது சீம் பவுலர் என்ற பங்கை ஆற்றலாம்.

வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாக ஒரு முனையில் சிக்கனமாக வீசுவது எனது ரோல். பேட்டிங்கிலும் அணி விரும்பும் ஸ்கோரை எட்ட வைப்பதாகும்.

என்னுடைய 21-வது வயதில் அனில் கும்ப்ளேயுடன் ரஞ்சி டிராபியில் ஆடினேன், அவர் கடினமான ஒரு நபர். ஆக்ரோஷமான கிரிக்கெட்டை ஆட அனில் வலியுறுத்துவார். என்னால் டெஸ்ட் சதம் அடிக்க முடியும் என்று அவர் எனக்கு உத்வேகமூட்டியுள்ளார்.

இவ்வாறு கூறினார் ஸ்டூவர்ட் பின்னி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்