பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட டி.ஆர்.எஸ். சர்ச்சை முடிந்தது, இரு அணிகளும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவோம் என்று கூறிய பின்பும் பத்திரிகையாளர்கள் அந்தப் பிரச்சினையை விடாமல் கோலியிடமும், ஸ்மித்திடமும் எழுப்பி வருகின்றனர்.
விராட் கோலி முன்பு கூறும்போது, ஸ்மித் தான் அவுட் ஆன போது டி.ஆர்.எஸ் உதவிக்காக் ஓய்வறையை நாடியது போன்று முன்னதாக இருமுறை இதே காரியத்தைச் செய்ததாக விமர்சனம் செய்திருந்தார்..
இந்நிலையில் நாளை (வியாழன்) ராஞ்சியில் 3-வது டெஸ்ட் போட்டி உள்ள நிலையில் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், “நான் செய்த தவறுதான் முதல் முறை, ஒரு அணியாக நாங்கள் அத்தகைய தவறுகளை இழைப்பவர்களல்லர். கோலி களத்தில் இருக்கும் போதே இருமுறை நாங்கள் அவ்வாறு தவறாக நடந்து கொண்டோம் என்று கோலி கூறுவது அபத்தம், உண்மையில் இருமுறை அப்பீல் கேட்கும் அவ்வளவு நேரம் கோலி கிரீஸில் இருந்ததாக நான் நினைக்கவில்லை.
அவர் கருத்தைக் கூற கோலிக்கு உரிமை உண்டு. ஆனால் என் பார்வையின் படி அவரது கருத்து முற்றிலும் தவறு.
ராஞ்சி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஐசிசி மேட்ச் ரெஃப்ரி ரிச்சி ரிச்சர்ட்சனை கோலியும், நானும் சந்திக்கும் போது அவரிடம் சில விளக்கங்களைக் கேட்கலாம் என்று இருக்கிறேன். அதாவது நான் செய்த தவறு தவிர கோலி குறிப்பிடும் அந்த 2 முறை எது என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்றார்.
விராட் கோலியோ, மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் வலைவிரித்த போதும் அந்த விவகாரத்தை விடுத்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago