குரேஷியாவிடம் சாம்பியன் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி: இறுதி 16-ல் இத்தாலியுடன் மோதல்

By ஆர்.முத்துக்குமார்

பிரான்ஸில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடரில் குரேஷியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுற்ற கடந்த முறை சாம்பியன் ஸ்பெயின் அணி இதனால் இறுதி-16 சுற்றில் இத்தாலியை சந்திக்க நேரிட்டுள்ளது.

பிரிவு டி-யில் ஸ்பெயின் முதலிடம் பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் குரேஷிய அணியின் இவான் பெரிசிக் அடித்த கடைசி நேர அதிர்ச்சி கோலினாலும், ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டதாலும் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.

ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருந்த போது செர்ஜியோ ரேமோஸ் பெனால்டி வாய்ப்பைத் தவறவிட, கடைசி 3 நிமிடங்கள் இருக்கும் போது பெரிசிக் கோல் அடித்து வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.

15 போட்டிகளாக தோல்வியடையாத யூரோ சாதனை ஸ்பெயினை பொருத்தவரை முடிவுக்கு வந்துள்ளது. தொடக்கத்தில் ஸ்பெயின் அணியே ஆதிக்கம் செலுத்தியது, 7-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இதுவும் இந்தத் தொடரில் ஸ்பெயின் வீரர்கள் செயல்படுத்தும் அபாரமான துல்லியம் மற்றும் சாதுரியத்துக்கு மற்றொரு உதாரணம், எந்த ஒரு அணியும் ஸ்பெயின் போல் இந்தத் தொடரில் இவ்வளவு துல்லியமான கால்பந்தாட்டத்தை ஆடவில்லை என்றே கூறிவிடலாம், என்ன இந்தப் போட்டி இனியெஸ்டாவின் ஆதிக்கம் கடந்த போட்டிகளை ஒப்பிடும்போது சற்றே குறைந்தது.

டேவிட் சில்வா 7-வது நிமிடத்தில் பந்தை குரேஷிய எல்லைக்குள் கொண்டு சென்றார், பிறகு ஒரு சற்றும் எதிர்பாராத ரிவர்ஸ் பாஸ் மூலம் செஸ்க் பேபர்காஸுக்கு அனுப்பினார். அவர் குறுக்காக பந்தை எடுத்துச் சென்றதை யாரும் கவனிக்காதது போல் இருந்தது, கடைசியில் அவர் செய்த கிராஸ் பேக் போஸ்ட்டுக்கு வந்த மொராட்டாவினால் கோலாக மாற்றப்பட்டது. இந்தத் தொடரில் இவரது 3-வது கோலாகும் இது. காரத் பேலுடன் சரிசமமாக நிற்கிறார் மொராட்டா.

ஒரு அணியாகத் திரண்டு ஆடும் தங்கள் திட்டத்தில் சற்றும் சுணக்கம் ஏற்படாத ஸ்பெயின் 2-வது கோலையும் அடித்திருக்கும், ஆனால் இம்முறை சில்வாவின் கிராஸை நொலிட்டோ கோலுக்கு சற்று வெளியே அடித்தார். இன்னொரு புறம் குரேஷியா தனது அச்சுறுத்தல் ஆட்டத்தையும் கைவிடவில்லை, ஸ்பெயின் அணி மீதான ‘பிரபை’ குறித்து கவலைப்படாமல் ஆடியதால் குரேஷியா தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை ஆடமுடிந்தது.

ஸ்பெயின் தனது 2-வது கோலுக்காக தேடிக்கொண்டிருக்கும் போது குரேசியா சமன் செய்தது. பெரிசிக் கிராஸ் ஒன்று காலினிச்சிடம் வர ரேமோஸைக் கடந்து அவர் பந்தை எடுத்து வந்து ஸ்பெயினின் டி ஜியாவைத் தாண்டி கோலாக மாற்றினார் 1-1.

2-வது பாதியில் குரேஷியா தன்னம்பிக்கையுடன் தொடங்கியது, முதலில் டாரிஜோ ஸ்ரணாவின் கிராஸை ஸ்பெயினின் டேவிட் டி ஜியா தட்டி விட்டார், பிறகு டின் ஜெட்வஜ் அதே பந்தை அடித்ததையும் தடுத்தார்.

ஆனால் 72-வது நிமிடத்தில் தங்களுக்கு எதிராக அநீதி பெனால்டி ஸ்பெயின் சார்பாக வழங்கப்பட்டதாக குரேஷியா வருந்தியிருக்கக் கூடும். இனியெஸ்டா அடித்த அபாரமான தூக்கி அடித்த பாஸை சில்வா விரட்டினார். ஆனால் அவருக்கு குரேஷிய வீரர் சைமி வ்ரசாலிகோ கடும் நெருக்கடி கொடுக்க கீழே விழுந்தார் சில்வா.

இதற்கு ஸ்பாட் கிக் கொடுக்கப்பட்டது. கேப்டன் ரேமோஸ் பெனால்டி ஷாட்டை சரியாக அடிக்கவில்லை, குரேஷிய கோல் கீப்பர் சுபசிச் சுலபமாக தடுத்து விட்டார். கேப்டன் ரேமோஸ் கால்பந்து வாழ்வில் இது பெரிய கரும்புள்ளியாகவே பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.

இது நடக்கும் போது ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருந்தன. ஆனால் ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருக்கும்போது பெரிசிக் அருமையான கோல் ஒன்றை அடிக்க குரேஷியா 2-1 என்று வெற்றி பெற்று குரூப் டியில் முதலிடம் பிடித்து இறுதி 16 சுற்றில் பெரிய அணிகளை சந்திப்பதை தவிர்த்துள்ளது, ஸ்பெயின் இத்தாலி அணிகள் திங்கட்கிழமை மோதுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்