ஷேன் வார்னின் சிறந்த ஆஸி. ஒருநாள் அணியில் கிளார்க், ஹெய்டன், ஸ்டீவ் வாஹ் இல்லை

By இரா.முத்துக்குமார்

கடந்த 25 ஆண்டுகளில் சிறந்த ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணியை ஷேன் வார்ன் தனது பேஸ்புக்கில் அறிவித்துள்ளார். இதில் ஸ்டீவ் வாஹ், மேத்யூ ஹெய்டன், கிளார்க் போன்றோருக்கு இடமளிக்கப்படவில்லை.

ஷேன் வார்னின் சிறந்த ஆஸ்திரேலிய ஒருநாள் அணி வருமாறு:

ஆலன் பார்டர் (கேப்டன்)

மார்க் வாஹ்

ஆடம் கில்கிறிஸ்ட்

ரிக்கி பாண்டிங்

மைக் ஹஸ்ஸி

மைக்கேல் பெவன்

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

மிட்செல் ஜான்சன்

ஷேன் வார்ன்

பிரெட் லீ

கிளென் மெக்ரா

தற்போதைய ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேனுக்கும் இதில் இடமில்லை. டீன் ஜோன்ஸுக்கும் இடமில்லை. மார்க் டெய்லருக்கும் இடமில்லை.

“4-ம் நிலையே தேர்வு செய்ய கடினமானது, ஆனால் அந்த இடத்தை மைக் ஹஸ்ஸி வென்றார். இங்குதான் டேமியன் மார்ட்டின், கிளார்க், டேரன் லீ மேன் ஆகியோரை விட மைக் ஹஸ்ஸி முக்கியமானவர்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆல்ரவுண்டர் இடத்தில் இயன் ஹார்வி, ஷேன் வாட்சனைக் காட்டிலும் சிறந்தவர்” என்றார்.

இந்த அணியில் கில்கிறிஸ்ட் நீங்கலாக அனைவருமே பந்து வீசக்கூடியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் கிரெய்க் மெக்டர்மட், ஜேசன் கில்லஸ்பி ஆகியோரும் வார்னால் கண்டுகொள்ளப் படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்