டி.ஆர்.எஸ் முறைகளில் மாற்றம்; களத்தில் ஒழுங்கீனமாக நடந்தால் வெளியேற்றம்: ஐசிசி-யின் புதிய மாற்றங்கள்

By ஏஎன்ஐ

டி.ஆர்.எஸ் பயன்படுத்தும் முறைகளில் மாற்றங்கள் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கமிட்டியின் பரிந்துரைகள் அனைத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனி டி20 போட்டிகளில் டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்தலாம்.

நடுவர் சொல்லும் முடிவை மறு ஆய்வு செய்யும் டி.ஆர்.எஸ் 2011-ஆம் முதல் அமலுக்கு வந்தது. இதன்படி கள நடுவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய பேட்டிங் செய்யும் அணியோ, பந்துவீச்சு செய்யும் அணியோ கோர முடியும். அது மூன்றாவது நடுவருக்கு சென்று முடிவு தெரிய வரும். இந்த டி.ஆர்.எஸ் முறைக்கு ஆதரவும், விமர்சனங்களும் சரிசமமாகவே இருந்தன. இந்திய கிரிக்கெட் வாரியம் மிகத் தாமதமாகவே இந்தியப் போட்டிகளில் டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்த ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாறிவரும் கிரிக்கெட் சூழலின் காரணமாகவும், ஆட்டத்தை இன்னும் சுவாரசியமாக்கவும் டி.ஆர்.எஸ் முறையில் ஒரு சில மாற்றங்கள் தேவை என்ற கோரிக்கைகள் எழுந்தன. தொடர்ந்து இதற்கென தனி கமிட்டி ஒன்றை ஐசிசி நியமித்தது. தற்போது அந்த கமிட்டியின் பரிந்துரைகள் அனைத்துக்கும் ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.

டி.ஆர்.எஸ் புதிய மாற்றங்களில் முக்கிய அம்சங்கள் சில

# இனி டி20 போட்டிகளில் டி.ஆர்.எஸ் முறை பயன்படுத்தப்படும்.

# டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் டி.ஆர்.எஸ்-ன் எண்ணிக்கை டாப் அப் செய்யப்படாது.

# டி.ஆர்.எஸ் முடிவு கள நடுவரின் தீர்ப்பாகவே தீர்ப்பு வரும் பட்சத்தில் அணியின் டி.ஆர்.எஸ் கோரிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

இன்னும் சில கட்டுப்பாடுகள்

கால்பந்தாட்டங்களில், களத்தில் விளையாடும் வீரர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், கள நடுவர் அவரை ஆட்டத்திலிருந்து வெளியே அனுப்பலாம். அது இனி கிரிக்கெட் ஆட்டங்களிலும் நடைமுறைக்கு வரவுள்ளது.

மேலும், பேட்ஸ்மென் ரன் அவுட் தீர்ப்பு விதிக்கும் முறையிலும் சிறிய மாறுதல் கொண்டு வரப்பட்டுள்ளது. பேட்ஸ்மென் க்ரீஸை தொட்ட பிறகு, அதைத் தாண்டி பேட் அந்தரத்தில் இருந்தால், அந்த பேட்ஸ்மென் க்ரீஸில் இருந்த கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படும். க்ரீஸை தொட்டு, அதை தாண்டி பேட் அந்தரத்தில் இருந்தால் ஆட்டமிழந்ததாக ஆகாது. அதாவது சில வேளைகளில் டைவ் அடித்து ரீச் செய்யும் போது சில வேளைகளில் மட்டை கிரீசுக்குள் இருந்தாலும் அதன் ஒரு பகுதி மேலே தூக்கியிருந்தால் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, இனி அது அவுட் கிடையாது.பேட்டின் அகல நீள அளவுகளிலும் சில கட்டுப்பாடுகளை ஐசிசி கொண்டுவந்துள்ளது.

மட்டையின் விளிம்புகளின் அடர்த்தி 40மிமீ வரைதான் இருக்கலாம் என்று எம்சிசி. வலியுறுத்தியிருந்தது இது முறைப்படுதப்பட வாய்ப்புள்ளது.

அதே போல் டாப் வீரர்களின் மட்டை விளிம்புகள் பெரும்பாலும் 38-42 மிமீ அடர்த்தி கொண்டதாக உள்ளது. சில வேளைகளில் மட்டையின் விளிம்புகள் 50 மிமீ அடர்த்திக் கொண்டதாக உள்ளது. இதுமிகவும் அதிகம் என்று கமிட்டி கருதுகிறது. எட்ஜ் எடுத்தால் சிக்ஸ் போவது என்பது இதன் மூலம் தடுக்கப்பட வாய்ப்புள்ளது,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்