ஆம்லா சதம்; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி: நியூஸி.க்கு எதிரான தொடரையும் வென்றது

By பிடிஐ

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் ஆம்லா 119 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார்.

நியூஸிலாந்தின் மவுண்ட்

மான்கேனுய் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட் செய்ய அழைத்தது. ஹசிம் ஆம்லா-டி காக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.3 ஓவர்களில் 56 ரன்கள் சேர்த்தது. டி காக் 26 ரன்களில் வெளியேற, ஆம்லாவுடன் இணைந்தார் டூ பிளெஸ்ஸி.

கடந்த போட்டியில் சொற்ப ரன்களில் வெளியேறிய டூ பிளெஸ்ஸி,இந்த முறை அதை ஈடுகட்டும் வகையில் அசத்தலாக ஆடினார். ஆம்லா 69 பந்துகளில் அரைசதத்தை எட்ட, டூ பிளெஸ்ஸி 52 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். தென் ஆப்பிரிக்க அணி 169 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் நீஷம். 73 பந்துகளைச் சந்தித்த டூ பிளெஸ்ஸி 2 சிக்ஸர்,

3 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டூ பிளெஸ்ஸி -ஆம்லா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.

ஆம்லா 16-வது சதம்

பின்னர் வந்த கேப்டன் டிவில்லியர்ஸ் அதிரடியாக ரன் சேர்க்க, 38-வது ஓவரில் 200 ரன்களை எட்டியது தென் ஆப்பிரிக்கா. தொடர்ந்து வேகம் காட்டிய டிவில்லியர்ஸ் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜே.பி.டுமினி களமிறங்க, மறுமுனையில் ஆம்லா 127 பந்துகளில் சதம் கண்டார். இது ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 16-வது சதமாகும். அவர் 135 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த அணி கடைசி 3 ரன்களுக்கு டுமினி (19 ரன்கள்) உள்பட 5 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது.

நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், டிம் சவுதி, மெக்லீனாகான், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நியூஸிலாந்து தடுமாற்றம்

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணி முந்தைய ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவுக்குள்ளானது. தொடக்க ஆட்டக்காரர் கப்டில் 11, நீஷம் 10, பின்னர் வந்த லேத்தம் 16, பிரவுன்லி 20, ஆண்டர்சன் 1, கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 12 என அடுத்தடுத்து வெளியேற, 9 விக்கெட்டுக்கு 134 ரன்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது நியூஸிலாந்து.

ரோஞ்சி 79

ஆனால் கடைசி விக்கெட்டுக்கு இணைந்த ரோஞ்சியும், மெக்லீனாகானும் இணைந்து நியூஸி.யை படுதோல்வியிலிருந்து மீட்டனர். ரோஞ்சி 83 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, நியூஸிலாந்தின் இன்னிங்ஸ் 46.3 ஓவர்களில் 210 ரன்களோடு முடிவுக்கு வந்தது. மெக்லீனாகான் 34 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெயின், பிலாண்டர், டிவில்லியர்ஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆம்லா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது தென் ஆப்பிரிக்கா.

கடைசி ஆட்டம் வரும் திங்கள்கிழமை ஹாமில்டனில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் வெல்லும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்