ஆசிய விளையாட்டு மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றார்.
51 கிலோ எடைப்பிரிவில் மேரிகோம் தங்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேரி கோம் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
5 முறை உலக சாம்பியனான மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனை ஜாய்னா ஷெகெர்பெகோவா என்பவரை 2-0 என்று வெற்றி பெற்றார்.
முதல் சுற்றில் எதிரணி வீரரைக் கண்டு அஞ்சுவது போல் பாவித்த மேரி கோம் தன்னை தூரப்படுத்திக் கொண்டு கஜஸ்கதான் வீராங்கனைத் தன்னைத் தாக்க அனுமதி கொடுத்து பொறியில் சிக்க வைக்க நினைத்தார். ஆனால் ஷெகெர்பெகோவா பொறியில் சிக்கவில்லை.
பொறியில் சிக்க வைக்க முடியாத நிலையில் தாக்குதல் ஆட்டத்தைத் தொடுத்தார் மேரி கோம். பிறகு 3வது சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தினார். மேரி கோம் மாற்று உத்திக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாட ஷெகெர்பெகோவா அடிக்கடி மேரி கோமை இறுக்கப் பிடித்தார். இதனால் நடுவர் அவரை எச்சரித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில், இதுவரை இந்தியா 7 தங்கம், 8 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 mins ago
விளையாட்டு
49 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago