யூரோ 2016: பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி; அரையிறுதியில் வேல்ஸ் அணி

By ஆர்.முத்துக்குமார்

பிரான்ஸில் நடைபெறும் யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் வலுவான பெல்ஜியம் அணியை வேல்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

உலகத் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள பெல்ஜியம் இந்த அதிர்ச்சிகரத் தோல்வியிலிருந்து மீண்டுவர நீண்ட காலமாகும் என்று கூறப்படுகிறது. வேல்ஸ் அணி தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ளது.

அரையிறுதியில் போர்ச்சுகல் அணியைச் சந்திக்கிறது வேல்ஸ்.

பெல்ஜியம் தரப்பில் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் நைகோலன் ஒரு அபாரமான கோலை அடித்து முன்னிலை கொடுத்தார். 31-வது நிமிடத்தில் வேல்ஸ் கேப்டன் ஆஸ்லே வில்லியம்ஸ் தலையால் முட்டி கோல் அடித்து 1-1 என்று சமன் செய்தார். பிறகு வேல்ஸ் அணியின் ராப்சன் கேனு 55-வது நிமிடத்திலும் சாம் வோக்ஸ் 86-வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க வேல்ஸ் வெற்றி பெற்றது, மைதானத்தில் குடிபோதையில் இருந்த வேல்ஸ் ரசிகர்களின் சத்தம் விண்ணைப் பிளந்தது.

முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது வேல்ஸ்.

ஆட்டம் தொடங்கிய போது பெல்ஜியம் அணியின் ஆதிக்கம் தூக்கலாக இருந்தது. முதல் 3 கோல் முயற்சிகளை வேல்ஸ் அணி சுவராக நின்று தடுத்தது. முதலில் யானிக் பெரைரா கராஸ்கோ அருமையான கோல் வாய்ப்பை வேல்ஸ் கோல் கீப்பர் ஹென்னிஸியிடம் நேராக அடித்தார். அதன் பிறகு தாமஸ் மியூனியரின் கோல் முயற்சியை நீல் டெய்லர் தடுத்தார். பிறகு பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்டின் கோல் முயற்சியை ஆஷ்லே வில்லியம்ஸ் பென் டேவிஸ் சேர்ந்து தடுத்தனர். இதெல்லாம் முதல் 8 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்தது.

கடைசி முயற்சி தடுக்கப்பட்ட போது கிடைத்த கார்னர் வாய்ப்பை கெவின் டி புருயின் அடிக்க ரொமிலு லகூகு வினையாற்றுவதில் மந்தமாகச் செயல்பட்டார். 6 அடிக்குள்ளிலிருந்து கோல் அடிக்க வேண்டிய அருமையான வாய்ப்புப் தவற விடப்பட்டது.

எனவே முதல் 8 நிமிடங்களில் குறைந்தது 2 கோல்களையாவது பெல்ஜியம் அடித்திருக்க வேண்டும், ஆனால் 3 முறை வேல்ஸ் அருமையாக தடுத்தனர். இந்த இழுபறி நிலை 13-வது நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்ட் பந்தை அருமையாக நைங்கோலனுக்கு அளிக்க அவர் சுமார் 25-30 அடி தூரத்திலிருந்து நீளமான ஷாட் ஒன்றில் பந்தை உயரமாக வலைக்குள் செலுத்த வேல்ஸ் கோல் கீப்பர் ஹென்னிசியின் முயற்சி பலனளிக்கவில்லை பெல்ஜியம் 1-0 என்று முன்னிலை பெற்றது.

இதனையடுத்து 26-வது நிமிடத்தில் வேல்ஸ் சமன் செய்திருக்க வேண்டும், ஆனால் ஆரோன் ராம்சே பந்தை வெட்டி எடுத்துச் சென்று டெய்லரிடம் அனுப்ப 6 அடியிலிருந்து டெய்லர் கோல் அடித்திருக்க வேண்டும், ஆனால் திபா கர்டாய்ஸின் அருமையான டைவ் கோலை முறியடித்தது.

ஆனால் நீண்ட நேரம் பெல்ஜியம் முன்னிலையைத் தக்க வைக்க முடியவில்லை, 31-வது நிமிடத்தில் ராம்ஸேயின் கார்னர் ஷாட்டில் ஆஷ்லே வில்லியம்ஸ் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்த 1-1 என்று சமன் ஆனது, இது வில்லியம்சின் 2-வது சர்வதேச கோல், முதல் கோல் 6 ஆண்டுகளுக்கு முன்பாக அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆஷ்லே வில்லியம்சை ஒருவரும் கவர் செய்யவில்லை.

பிறகு காரத் பேல் எடுத்த அருமையான முயற்சி முறியடிக்கப்பட்டது.

இடைவேளைக்குப் பிறகும் பெல்ஜியமே கோல் அடிக்கும் என்பது போல் ஆடியது. ரொமீலு லகூகு தலையால் அடித்த ஷாட் வெளியே சென்றது. டி புருயின் ஷாட் ஒன்று கிராஸ் பாருக்கு மேலே சென்றது. ஈடன் ஹசார்டின் இன்னொரு முயற்சியும் வெளியே சென்றது.

ஆனால் 55-வது நிமிடத்தில் ராப்சன் கேனு வேல்ஸ் தரப்பில் 2-வது கோலை அடிக்க, 86-வது நிமிடத்தில் சாம் வோக்ஸ் 3-வது கோலை அடித்தார். 55-வது நிமிடத்தில் அடிக்கப்பட்ட வேல்ஸ் கோலுக்கு இரண்டே இரண்டு பேர்தான் காரணம், பெல்ஜியம் தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டது. கோல் கீப்பரை டென்ஷன் படுத்தியது.

இடையே 73-வது நிமிடத்தில் மிக அருகிலிருந்து தலையால் கோலுக்குள் தள்ளும் முயற்சியில் பெல்ஜியம் கோட்டை விட்டது. 82-வது நிமிடத்தில் பெனால்டி பகுதியில் பெல்ஜியம் வீரர் கோல் அடிக்கும் நிலையில் கீழே தள்ளப்பட்டார், ஆனால் அது வேல்ஸ் பந்தை எடுக்கும் முயற்சியே என்று பெனால்டி கிக் கொடுக்கப்படவில்லை. 90-வது நிமிடத்தில் நைங்கோலன் தூரத்திலிருந்து அடித்த ஷாட்டை வேல்ஸ் கோல் கீப்பர் பிடித்தார். ஆட்டம் காய நேரத்துக்குச் சென்றது ஆனால் ஒன்றும் நடக்கவில்லை பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்