2014-ம் ஆண்டு நடைபெற வுள்ள இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளை யாட ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
வங்கதேசத்தில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 5-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. டாப் 10 அணி கள் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. தகுதிசுற்று மூலம் மேலும் 6 அணிகள் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுகின்றன.
இத்தகுதிச் சுற்று ஆட்டங்கள் துபையில் நடைபெற்று வருகின்றன. இதில் அயர்லாந்து அணி ஹாங்காங்கை 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடர்ந்து 7-வது வெற்றியை பெற்றுள்ள 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு அயர்லாந்து தகுதி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி கென்யாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 6 வெற்றிகளைப் பெற்று ஆப்கானிஸ்தானும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு விளையாட தகுதி பெற்றது. தகுதிச் சுற்று மூலம் மேலும் 4 நாடுகளும் தேர்வு செய்யப்படும்.
20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி 2007ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. அப்போது தோனி தலைமை யிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago