இலங்கைக்கு எதிரான தொடர்: தோனிக்கு ஓய்வு; கோலி கேப்டன்

By பிடிஐ

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 3 போட்டிகளில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி வாரியத்துடன் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக இந்தியத் தொடரை பாதியிலேயே கைவிட்டது. இதனையடுத்து இலங்கை அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அழைக்க அந்த அணி நிர்வாகமும் அழைப்பை ஏற்றது.

இந்த நிலையில் அந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தோனிக்கு முதல் 3 போட்டிகளில் ஓய்வு அளிக்க முடிவெடுக்கபப்ட்டது.

குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப் படாமலேயே இந்த ஒரு நாள் தொடர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்பட்டார். காயமடைந்த மோகித் சர்மாவுக்கு பதிலாக வருண் ஆரோன் தேர்வு செய்யப்பட்டார்.

மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆடிய புவனேஷ் குமாருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகள், கட்டாக், ஐதராபாத், ராஞ்சி, கொல்கட்டா, மற்றும் ஆமதாபாத் மைதானங்களில் நடைபெறுகிறது. தேதிகள் இன்னமும் இறுதியாகவில்லை.

இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரஹானே, ரெய்னா, ராயுடு, ரித்திமான் சஹா, அஷ்வின், ஜடேஜா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, முரளி விஜய், வருண் ஆரோன், அக்‌ஷர் படேல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்