வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் வில்லியம்சன் 55 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார்.
நியூஸிலாந்தின் நேப்பியர் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 11, இம்ருல் கெய்ஸ் 0, சபிர் ரஹ்மான் 16, சவுமியா சர்க்கார் 0, ஷாகிப் அல்-ஹசன் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
10.4 ஓவர்களில் 67 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் மஹ்முதுல்லா 47 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களும், மோசடக் ஹொசைன் 20 ரன்களும் சேர்க்க சற்று வலுவான இலக்கை வங்கதேச அணியால் கொடுக்க முடிந்தது. நியூஸிலாந்து தரப்பில் அதிவேக பவுலர் லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும் வீல 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சாண்ட்னர் மீண்டும் அபாரமாக வீசி 20 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
142 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நீல் புரூம் 6, காலின் முன்ரோ 0, கோரே ஆண்டர்சன் 13, புரூஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். 10.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 62 ரன்களே சேர்த்தது.
அதன்பின்னர் கிராண்ட்ஹோமுடன் இணைந்து கேப்டன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடினார். வில்லியம்சன் 55 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்களும், கிராண்ட்ஹோம் 22 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் விளாச மேற்கொண்டு விக்கெட்களை இழக்காமல் 18-வது ஓவரிலேயே எளிதாக நியூஸிலாந்து அணி வெற்றியை வசப்படுத்தியது.
வில்லியம்சன் - கிராண்ட்ஹோம் ஜாடி 5-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டி 20 ஆட்டம் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.
வங்கதேசம் தரப்பில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 21 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago