அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் முதலிடத்தை இழக்கிறார்

By ஏஎஃப்பி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் அவர் முதலிடத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் முதல் நிலை வீராங்கனையான செரீனா, அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து விளை யாடினார்.

செரீனா தோல்வி

முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியின் அரை இறுதியில் விளையாடிய பிளிஸ்கோவா எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடி முதல் செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டில் செரீனா நெருக்கடி கொடுத்த போதிலும் மனம் தளராத பிளிஸ்கோ கடுமையாக போராடி அந்த செட்டை 7-6 என தன்வசமாக்கினார்.

முடிவில் 6-2, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிளிஸ்கோவா. இதன் மூலம் அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 23 ஆண்டுகளுக்கு இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் செக்குடியரசு வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் பிளிஸ்கோவா. கடைசியாக அந்த நாட்டை சேர்ந்த ஹெலீனா சுகோவா இறுதி சுற்றுவரை முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெர்பர் வெற்றி

இறுதிப்போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை சந்திக்கிறார் பிளிஸ்கோவா. கெர்பர், அரை இறுதி யில் தரவரிசையில் 74-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை எதிர்கொண்டார். இதில் கெர்பர் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

முதலிடத்தை இழந்தார்

பிளிஸ்கோவாவிடம் தோல்வி யடைந்ததால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 23-வது பட்டம் வெல்லும் செரீனாவின் கனவும், ஸ்டெபி கிராபின் அதிக கிராண்ட் ஸ்லாட் பட்டங்களின் சாதனையை முறியடிக்கும் கனவும் தகர்ந்தது. மேலும் இந்த தோல்வி யால் தரவரிசையில், 186 வாரங்க ளாக தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்த முதல் இடத்தையும் செரீனா வில்லியம்ஸ் இழந்துள்ளார்.

அமெரிக்க ஓபன் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முதல்நிலை வீராங்கனையாக உயர்வு பெற உள்ளார். வரும் திங்கள்கிழமை வெளியிடப்படும் புதிய தரவரிசை பட்டியலில் கெர்பர் முதலிடம் வகிப்பார். அமெரிக்க ஓபன் பட்டத்தை கெர்பரால் வெல்லமுடியாமல் போனாலும் அவர் முதல் நிலை வீராங்கனையாகவே திகழ்வார்.

தகுதியானவர்

தோல்வி குறித்து செரீனா கூறும் போது, “இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் எனது இடது முழங்காலில் புண் ஏற்பட்டிருந்தது. இது விளையாடும்போது எனது கவனத்தை திசை திருப்பியது. பிளிஸ்கோவாவுக்கு இந்த நாள் சிறப்பாக அமைந்தது. நான் 100 சதவீதம் உடல்தகுதியுடன் இல்லை. எனினும் பிளிஸ்கோவா சிறப்பாக விளையாடினார். இந்த வெற்றிக்கு அவர் தகுதியானவர்தான்’’ என்றார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு

28 வயதான இடதுகை வீராங்கனையான கெர்பர் இந்த ஆண்டில் 3-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில் கால்பதித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற அவர் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் செரீனாவிடம் தோல்வி கண்டிருந்தார்.

கடைசியாக 1996-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீராங்கனையான ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் விளையாடியிருந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்நாட்டை சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர் தற்போது இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார்

நம்ப முடியவில்லை

பிளிஸ்கோவா கூறும்போது,

‘‘என்னால் இந்த வெற்றியை நம்ப முடியவில்லை. சிறப்பாக விளையாடும்போது எந்த வீராங்கனையையும் வீழ்த்த முடியும் என்பது எனக்கு தெரியும். இறுதிப்போட்டியில் நானும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் செரீனாவை வீழ்த்தியுள் ளேன். முதல் செட்டை அவர் இழந்த போதிலும் 2-வது செட்டில் போராடினார். அவரை வெல்ல, நான் கடுமையாக போராடி வேண்டியதிருந்தது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்