ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கெதிரான இரானி கோப்பை போட்டியில் கர்நாடக அணி தனது முதல் இன்னிங்ஸில் 98 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் குவித்துள்ளது.
பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 201 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பெங்களூர் அணி, முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய கர்நாடக அணியில் ராகுல் மேலும் 7 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் ஆட்டமிழக்க, கணேஷ் சதீஷுடன் இணைந்தார் மணீஷ் பாண்டே. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. 47 பந்துகளைச் சந்தித்த பாண்டே 7 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு சதீஷ் 180 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, கருண் நாயரும் ஸ்டூவர்ட் பின்னியும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் கர்நாடகம் 300 ரன்களைக் கடந்தது.
அந்த அணி 375 ரன்களை எட்டியபோது கருண் நாயர் ஆட்டமிழந்தார். அவர் 161 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் எடுத்தார். நாயர்-பின்னி ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்டூவர்ட் பின்னி சதமடித்தார்.
2-வது நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடகம் 98 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் குவித்துள்ளது. பின்னி 107 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 107 ரன்களும், கௌதம் 6 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் பங்கஜ் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போதைய நிலையில் கர்நாடக அணி 189 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago