உலகின் முன்னணி டென்னிஸ் வீரரும், 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவருமான ஸ்பெயினின் ரஃபேல் நடாலுக்கு வரும் நவம்பர் 3-ம் தேதி குடல் வால் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
அதனால் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளான உலக டூர் பைனல்ஸ் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலிருந்தும் அவர் விலகியிருக்கிறார்.
ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்று வரும் ஸ்விஸ் இண்டோர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றிருந்த நடால் நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதியில் 2-6, 6-7 (4) என்ற நேர் செட்களில் குரேஷியாவின் போர்னா கோரிக்கிடம் தோல்வி கண்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடால், “வரும் நவம்பர் 3-ம் தேதி குடல் வால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருக்கிறேன். அறுவை சிகிச்சை செய்யாமல் அடுத்து நடைபெறவுள்ள பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டியிலோ அல்லது ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டியிலோ பங்கேற்பதால் எந்த பயனும் கிடையாது. இன்றைய தினத்தோடு இந்த சீசனுக்கு விடை சொல்லிக் கொள்கிறேன்.
இந்த சீசனில் முதல் 6 மாதங்கள் எனக்கு சிறப்பாக அமைந்தன. அடுத்த 3 மாதம் மணிக்கட்டு காயத்தால் பாதிக்கப்பட்டேன். இப்போது குடல் வால் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டிக்கோ, ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டிக்கோ நான் போகப்போவதில்லை.
இப்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதற்காக சில பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது. அறுவை சிகிச்சைப் பிறகு முழுமையாகக் குணமடைய 5 வாரங்கள் ஆகும். எஞ்சிய 2 போட்டிகளில் விளையாடினாலும் நான் வெற்றி பெறப் போவதில்லை. அடுத்த ஆண்டு பலம் பொருந்திய வீரராக டென்னிஸுக்கு திரும்புவேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago