ஐஸ்லாந்தை வீழ்த்தி அரையிறுதியில் ஜெர்மனியைச் சந்திக்கும் பிரான்ஸ்: 5 முக்கிய அம்சங்கள்

By ஆர்.முத்துக்குமார்

யூரோ 2016 கால்பந்து தொடரில் அச்சுறுத்தும் அணியாக திகழ்ந்த ஐஸ்லாந்து அணியை பிரான்ஸ் தங்களது மிரட்டலான அதிரடி ஆட்டத்தினால் 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

அரையிறுதியில் வரும் வியாழனன்று ஜெர்மனியை சந்திக்கிறது பிரான்ஸ்.

இந்த ஆட்டத்தின் 5 முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. கோல்கள்

பிரான்ஸ் தரப்பில் ஆட்ட நாயகன் கிரவ்த் 12 மற்றும் 59வது நிமிடங்களில் கோல் அடிக்க, போக்பா 19வது நிமிடத்திலும், பயேட் 42 வது நிமிடத்திலும் கிரெய்ஸ்மேன் 45-வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க, ஐஸ்லாந்து தரப்பில் மகா த்ரோ மன்னன் குனார்சென்னின் இரண்டு அருமையான த்ரோக்களில் சிதர்சன் 56-வது நிமிடத்திலும் ஜார்னசன் 84-வது நிமிடத்திலும் கோல்கலை அடிக்க 5-2 என்று ஐஸ்லாந்தை முறியடித்தது பிரான்ஸ்.

இந்த வெற்றியை அடுத்து பிரான்ஸ் அணி பயிற்சியாளர் திதியர் டெஸ்சாம்ப்ஸ் ஜெர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 1958க்குப் பிறகு பிரான்ஸ் அணி ஜெர்மனியை எந்த ஒரு சீரியஸான போட்டித் தொடரிலும் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. வேகமும் ஆக்ரோஷமும்:

கடைசி நிமிட கோல்களினால் சிலபல வெற்றிகளைப் பெற்ற பிரான்ஸ், ஐஸ்லாந்துக்கு எதிரான காலிறுதியில் அருமையான கட்டுப்பாட்டுடன் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. பிரான்ஸ் அணியின் ஆட்ட நாயகன் ஆலிவியர் கிரவ்த் 12-வது நிமிடத்திலேயே கோலை அடித்தார். மட்டுய்டியின் அருமையான பாஸை, பர்கிர் செவர்சனைக் கடந்து கேரி ஆர்னசனையும் கடந்து அடிக்கப்பட அங்கு கிரவ்த் ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹால்டர்சன் கால்களுக்கு இடையே வலைக்குள் செலுத்தினார். ஆனால் கிரவ்த் ஆஃப் சைடு என்று பிற்பாடு ரீ-ப்ளேக்களில் தெரியவந்தது, ஆனால் கொடுப்பதற்கு மிகவும் கடினமான ஆஃப் சைடாகும் இது.

19-வது நிமிடத்தில் கிரெய்ஸ்மேனின் கார்னரை போக்பா தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார். அதன் பிறகு 42-வது நிமிடத்தில் பகாரே சாக்னா கிராஸ் ஆட கிரவ்த் கீழே தள்ளப்பட்டார், ஆனால் பயேட் இடது காலால் மிக அருமையாக கோலுக்குள் அடித்தார். இது இந்தத் தொடரில் பயேட்டின் 3-வது கோலாகும். 45-வது நிமிடத்தில் மத்துய்தி, தாழ்வான பாஸை கிரவ்திற்கு அனுப்ப அவர் கிரெய்ஸ்மானுக்கு அனுப்ப அவர் கோல்கீப்பரை முன்னே இழுத்து பிறகு கோலுக்குள் அடித்தார் பிரான்ஸ் 4-0 என்று இடைவேளையின் போதே ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

3. ஐஸ்லாந்து த்ரோ மன்னன் கேப்டன் குனார்சென்னின் அச்சுறுத்தல்:

ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து மகா த்ரோ குனார்சன் மீண்டும் ஒரு ஆற்றல் வாய்ந்த த்ரோவை சிதர்சனுக்கு அனுப்ப 6 அடி தூரத்திலிருந்து சிதர்சன் தலையால் அடிக்க பந்து போவர்சன்னிடம் வந்தது ஆனால் உமிட்டி அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்க இவரது ஷாட் பாருக்கு மேல் சென்றது. த்ரோ மூலமே பெனால்டி பகுதிக்குள் விட்டெறிகிறார் குனார்சன். இங்கிலாந்தை அன்று இப்படித்தான் காலி செய்தார். ஆனால் இம்முறை இது கோலாக மாறவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் குனார்சென் மீண்டும் அப்படிப்பட்ட த்ரோவை செய்ய கோல்பீன் சிதர்சன் அதனை கோலாக மாற்றினார். 84-வது நிமிடத்தில் ஸ்குலாசென் இடது புறத்திலிருந்து ஒரு அருமையான பாஸை மேற்கொள்ள ஜார்னசன் அதனைத் துல்லியமாக தலையால் முட்டி கோல் ஆக்கினார். ஐஸ்லாந்து அணி தோல்வியடைந்தாலும் எப்போதும் கோல் அடிக்கும் முயற்சியிலேயே இருந்தது. ஐஸ்லாந்து இந்தத் தொடரில் தங்களது முத்திரையைப் பதித்தனர்.

4.சுறுசுறுப்பான பிரான்ஸ் தாக்குதல்:

ஜெர்மனிக்கு எதிரான மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸின் எந்த வீரர் சரியான பார்மில் இருப்பார் அல்லது இருக்கிறார் என்பதைக் கூறுவது கடினம். ஆலிவியர் கிரவ்த் இரண்டு அபாரமான கோல்களை அடித்தார், அவருக்கு கிடைத்த 2 வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். ஆண்டாய்ன் கிரெய்ஸ்மான் தனது ஆக்ரோஷத்தினால் சுவர் போன்ற ஐஸ்லாந்து தடுப்பாட்டத்தை நிறைய முறை ஊடுருவினார். இவர் அடித்த கோல் யூரோ 2016-ல் அடிக்கப்பட்ட 100-வது கோலாகும்.

5. தடுப்பாட்டக் கோளாறுகள்:

பிரான்ஸின் தடுப்பாட்ட ஐயங்கள் எழக்காரணம் ஐஸ்லாந்தின் கேப்டன் குனார்சன் த்ரோ கோலாக மாறியதே. மேலும் 25-வது நிமிடத்தில் குனார்செனின் த்ரோ கோலாக மாறியிருக்கும், அப்போதும் பிரான்ஸ் தடுப்பாட்ட உத்திகள் கேள்விகளை எழுப்புவதாக இருந்த்து. 2-வது கோலின் போதும் ஜார்னசன் சுத்தமாக கவர் செய்யப்படவில்லை. எனவே ஐஸ்லாந்து 2 கோல்களை அடித்ததே பிரான்ஸின் தடுப்பாட்ட பலவீனங்களை காண்பிப்பதாக உள்ளன. இதனை நிச்சயம் ஜெர்மனி பயன்படுத்திக் கொள்ளும். எனவே இந்தப் புலத்தில் பயிற்சியாளர் டெஸ்சாம்பிற்கு வேலை உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்