நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா முதலிடம் தக்கவைப்பு

By இரா.முத்துக்குமார்

ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-2 என்று கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்தது.

டாஸ் வென்ற டிவில்லியர்ஸ் வேகப்பந்துக்கு சற்றே சாதகமான ஆடுகளத்தில் முதலில் நியூஸிலாந்தை முதலில் களமிறக்கியது, நியூஸிலாந்து அணி 41.1 ஓவர்களில் 149 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48/3 என்று சரிவு அபாயத்தில் இருந்தாலும் டுபிளெசிஸ் (51 நாட் அவுட்), டேவிட் மில்லர் (45 நாட் அவுட்) ஆகியோரது கூட்டணி மூலம் 88/4 என்ற நிலையிலிருந்து 32.2 ஓவர்களில் 150/4 என்ற ஸ்கோரை எட்டி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

கடந்த போட்டியில் 180 ரன்களை விளாசிய மார்டின் கப்தில் இன்று 4 ரன்களில் ரபாடா பந்தில் ஸ்டம்ப்களை இழந்து வெளியேறினார். கேன் வில்லியம்சன், டிவில்லியர்ஸின் அபாரமான பீல்டிங்குக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

பிரவுன்லி பெலுக்வயோ பந்தில் 24 ரன்களுக்கு எல்.பி.ஆனார். 12 ஓவர்களில் நியூஸிலாந்து 42/3 என்று ஆனது. ராஸ் டெய்லர் 8 ரன்களில் பெலுக்வயோ பந்தை மிக மோசமாக மிட்விக்கெட்டில் ஆட நினைத்து எல்.பி.ஆனார். ஜேம்ஸ் நீஷம் இறங்கி பிரிடோரியஸை 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் ஒருவரும் நிற்கவில்லை. லூக் ரோங்கி 8 ரன்களில் அதிகம் பவுன்ஸ் ஆகாத கிறிஸ் மோரிஸ் ஷார்ட் பிட்ச் பந்தில் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நீஷம் மட்டுமே ஒரு முனையில் மேலும் ஒரு பவுண்டரியையும், சிக்சரையும் அடித்து 24 ரன்களை எட்டினார், ஆனால் இவர் ரபாடா வீசிய அசுர பவுன்சரை ஆட முயன்று பந்தில் மட்டையில் பட்டு ஹெல்மெட்டில் பட்டு பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு சாண்ட்னர் 24 ரன்களையும் கிராண்ட்ஹோம் 48 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்தனர், கிராண்ட் ஹோம், ரபாடாவிடம் வீழ்ந்தார். இதனையடுத்து சவுதி, படேல், போல்ட் சோபிக்கவில்லை இதனால் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா 7 ஒவர்களில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, இம்ரான் தாஹிர் அதிசிறப்பாக வீசி 10 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் மீண்டும் சரியாக ஆடாமல் 6 ரன்களில் படேலிடம் வீழ்ந்தார். ஆம்லா 8 ரன்களில் கிராண்ட்ஹோம் பந்தில் சாண்ட்னர் கேட்சுக்கு வெளியேறினார். டுமினியும் படேல் பவுலிங்கில் சாண்ட்னர் கேட்சுக்கு அவுட் ஆக 48/3 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா.

பிறகு டிவில்லியர்ஸ் இறங்கி இந்த மட்டைபோடும் ஆட்டமெல்லாம் சரிப்பட்டு வராது என்று 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 23 ரன்களை எடுத்து நீஷம் பந்தில் ஆட்டமிழந்தார், ஆனால் இவரும், டுபிளெசிசும் இணைந்து 6 ஒவர்களில் 40 ரன்களை 4-வது விக்கெட்டுக்காக விளாசினர்.

88/4 என்ற நிலையில் டுபிளெசிஸ் (51), டேவிட் மில்லர் (45) ஆகியோர் மேலும் சேதமேற்படாமல் வெற்றிக்கு இட்டுச் சென்றனர். தென் ஆப்பிரிக்கா தொடரை 3-2 என்று கைப்பற்றியது. .ஆட்ட நாயகனாக ரபாடா தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்கா முதலிடத்தைத் தக்கவைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்