பிட்ச் சரியில்லாததால்தான் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தோம் என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் விளக்கமளித்துள்ளார். இலங்கை – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. நேற்று முன்தினம் முடிவடைந்த 2-வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இது தொடர்பாக கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கூறியது: முதல் இன்னிங்ஸில் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் எங்களை 165 ரன்களுக்குள் இலங்கை வீரர்கள் அவுட் ஆக்கிவிட்டனர். அடுத்து வந்த நாள்களில் பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியிருக்க வேண்டும். நாங்கள் வலுவான சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினோம். ஆனால் 5-வது நாள் வரை கூட பிட்ச்சில் வெடிப்புகள் ஏதும் காணப்படவில்லை. இது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago