தோனி அதிக மாற்றங்களை விரும்ப மாட்டார்; சேவாக், யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பில்லை: கங்குலி

By பிடிஐ

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சேவாக், யுவராஜ் சிங் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

கங்குலி தலைமையில் செழித்து வளர்ந்த வீரர்களான சேவாக், யுவராஜ் சிங் இந்த முறை உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை, காரணம் தோனி அதிக மாற்றங்களை விரும்பமாட்டார் என்று கங்குலி கூறியுள்ளார்.

இந்தியா டுடே குழுமம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்குலி புது டெல்லியில் செய்தியாளர்களிடம் தனது இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“சேவாக், யுவராஜ் ஆகியோர் நான் பார்த்ததில் மிகச்சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் காலம் இவர்களையும் பீடித்துள்ளது. இது அனைவருக்கும் ஏற்படுவதுதான்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிக மாற்றங்களை தோனியும் விரும்ப மாட்டார். ஆகவே யுவி, விரு வாய்ப்பு இல்லை என்றே நான் கருதுகிறேன்.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சிறப்பாக இல்லாவிட்டாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது எனவே இந்த முறை வெற்றி வாய்ப்பு உள்ளது.

விராட் கோலி அயல்நாட்டு சூழல்களில் நன்றாக ஆடிவந்துள்ளார், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெற்றி இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார் கோலி. அவரை நம்பி இந்தியா உள்ளது. அவர் சரியாக ஆடிவிட்டால் இந்தியா நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

ரெய்னா சமீபமாக நன்றாக விளையாடி வருகிறார், ஆனால் ஆஸ்திரேலியாவில் அவருக்குச் சவால்கள் அதிகம்.

இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு அதிக வாய்ப்பிருக்கிறது, காரணம் அந்த பிட்ச்களில் அவர்களிடம் நல்ல பவுலர்கள் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, நியுசீலாந்து அணிகள் உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள்” என்றார் கங்குலி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்