சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணி ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 4 புள்ளிகள் கூடுதலாக பெற்று 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம் அந்த அணி 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான வாய்ப்பை மிக அருகில் நெருங்கி உள்ளது.
தென் ஆப்ரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, வங்கதேச அணிகள் தலா ஒரு புள்ளிகளை இழந்துள்ளன. இந்தியா 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும், வங்கதேச அணி 7-வது இடத்திலும் உள்ளன.
வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் ஹசன் அலி, தொடக்க வீரர் பஹர் ஸமான் ஆகியோர் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 13 விக்கெட்கள் கைப்பற்றி சிறந்த வீரர் விருதை வென்ற ஹசன் அலி 12 இடங்களில் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
முகமது அமிர் 16 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தையும் ஜூனைத் கான் 7 இடங்கள் முன்னேறி 47-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதியில் 57 ரன்களும், இறுதி ஆட்டத்தில் 114 ரன்கள் விளாசிய பஹர் ஸமான் 58 இடங்கள் முன்னேறி 97-வது இடத்தை பிடித்துள்ளார். வெறும் 4 ஆட்டங்களில் மட்டுமே பஹர் ஸமான் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபர் அஸாம் 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும், முகமது ஹபீஸ் இரு இடங்கள் முன்னேறி 20-வது இடத்தையும், அசார் அலி 11 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்திய வீரர்களை பொறுத்த வரையில் பேட்டிங் தரவரிசையில், சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதியில் 123 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித் துள்ளார். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் 19-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.-
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago