ராஞ்சி டெஸ்ட் போட்டியில் முதல் நாளான்று பீல்டிங் செய்த போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. சுமார் 40 ஓவர்கள் மட்டுமே களத்தில் இருந்த அவர், அதன் பின்னர் களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் ரஹானேவே அணியை வழிநடத்தினார். காயம் அடைந்த விராட் கோலிக்கு ஐஸ்கட்டி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே பிசிசிஐ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘‘கோலிக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டதில் காயத்தின் தன்மை தீவிரமாக இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் அவர் போட்டியில் விளையாடுவார். சிகிச்சைக்கு பிறகு போட்டியில் அவர் தொடர்ந்து பங்கேற்பார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2-வது நாளான நேற்றும் கோலி பீல்டிங்கில் களமிறங்கவில்லை. முன்னதாக அவர் காலையில் சக அணி வீரர்களுடன் லேசான பயிற்சியில் ஈடுபட்டார். எனினும் பெரும்பாலான நேரம் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் ஆலோசனையில் ஈடுபட்டபடியே இருந்தார். இதற்கிடையே கோலி நிச்சயம் பேட்டிங்கில் களமிறங்குவார் என அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago