ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் யாசிர் ஷா முதலிடம்: ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளினார்

By இரா.முத்துக்குமார்

ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தானின் லெக்ஸ்பின்னர் யாசிர் ஷா முதலிடம் பிடித்தார்.

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு லெக்ஸ்பின்னர் ஒருவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஷேன் வார்ன் முதலிடம் வகித்தார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிக்குக் காரணமான யாசிர் ஷா 141 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து முதலிடம் பிடித்தார்.

மேலும் 13 டெஸ்ட் போட்டிகளில் 86 விக்கெட்டுகளை யாசிர்ஷா இதுவரை வீழ்த்தியுள்ளார். 100 விக்கெட்டுகளை விரைவில் இவர் வீழ்த்தினால், 1896-ம் ஆண்டு இங்கிலாந்து பவுலர் ஜார்ஜ் லோமான் 16 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அதிவேக 100 விக்கெட்டுகள் சாதனையை யாசிர் ஷா முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொடருக்கு முன்பாக தரவரிசையில் 4-ம் இடத்தில் இருந்தார் யாசிர் ஷா.

பவுலர்கள் தரவரிசை:

யாசிர் ஷா, அஸ்வின், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், டேல் ஸ்டெய்ன், ரவீந்திர ஜடேஜா, டிரெண்ட் போல்ட், ஜோஷ் ஹேசில்வுட், மோர்னி மோர்கெல், வெர்னன் பிலாண்டர்.

டெஸ்ட் பேட்டிங் தரவரிசை:

ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஹஷிம் ஆம்லா, ஜோ ரூட், ஏ.பி.டிவில்லியர்ஸ், ஆடம் வோஜஸ், யூனிஸ் கான், டேவிட் வார்னர், மிஸ்பா உல் ஹக், ஆஞ்சேலோ மேத்யூஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்