டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி கண்டு 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் காஷ்யப் 21-15, 21-18 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ராஜீவ் அவுசெப்பை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் கரின் ஸ்னாஸை எதிர்கொண்ட சாய்னா கடும் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி கண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 12-21 என்ற கணக்கில் இழந்த சாய்னா, அடுத்த இரு செட்களையும் 21-10, 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
சிந்து தனது முதல் சுற்றில் 21-13, 22-20 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் புய் இன் இப்பை தோற்கடித்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-ரஷ்யாவின் விளாடிமிர் இவானோவ் ஜோடி 18-21, 18-21 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் யூன் லங்-இங் சுயட் ஸீ ஜோடியிடம் தோல்வி கண்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago