ஹாக்கி லீக்: இந்தியா 6-வது இடம்

By செய்திப்பிரிவு

டெல்லியில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் பைனல் போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு 6-வது இடத்தைப் பிடித்தது.

சனிக்கிழமை மாலையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாகப் போராடின. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிய, 2-வது பாதி ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் இந்தியாவின் நிக்கின் திம்மையா கோலடித்தார். இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் கடைசிக் கட்டத்தில் பின்னடைவிலிருந்து மீண்ட பெல்ஜியம் 2 நிமிட இடைவெளியில் இரு கோல்களை அடித்து வெற்றி கண்டது.

உலகின் 8 முன்னணி நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்ததால் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி புதிய தரவரிசை வெளியாகும்போது 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 7-வது இடத்தைப் பிடிக்கும். அதேநேரத்தில் பெல்ஜியம் அணி ஓர் இடத்தை இழந்து 6-வது இடத்தைப் பிடிக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்