இலங்கை-வங்கதேசம் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 587 ரன்களும், வங்கதேசம் 426 ரன்களும் குவித்தன. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 467 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம், கடைசி நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 84 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் சேர்க்க, போட்டி டிராவில் முடிந்தது.
வங்கதேச வீரர் மோமினுல் ஹக் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் சேர்த்தார். 22 வயதான மோமினுலுக்கு இது 3-வது டெஸ்ட் சதமாகும்.
இந்தப் போட்டி டிராவில் முடிந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 248 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த இங்கை 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை இலங்கையின் சங்ககாரா தட்டிச் சென்றார். அவர் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முச்சதமும், 2-வது இன்னிங்ஸில் சதமும் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிராக வங்கதேசம் செய்த 2-வது டிரா இதுவாகும். இலங்கையுடன் இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம் 14-ல் தோல்வி கண்டுள்ளது. 2000-ல் டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்ற வங்கதேசம் இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 68 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago