இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் சதேஷ்வர் புஜாரா சதமடித்து ஆடிவருகிறார். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 451 ரன்களை விரட்டி வரும் இந்திய அணி 303 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
120 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் 3-வது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணிக்கு, முரளி விஜய் மற்றும் புஜாரா இணைந்து சிறப்பான அஸ்திவாரத்தை தந்தனர்.
129 பந்துகளில் முரளி விஜய் அரை சதம் எட்டினார். இது அவரது 50வது அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் வெகு நிதானமாக ஆடி வந்த புஜாரா ஒரு கட்டத்தில் 100 பந்துகளை சந்தித்து 23 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.
உணவு இடைவேளைக்கு சில மணித்துளிகளுக்கு முன்னால், முரளி விஜய் ஓ கீஃப் பந்தில் 82 ரன்களுக்கு ஸ்டம்பிங்க் ஆகி பெவிலியன் திரும்பினார். உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்க, கேப்டன் கோலி புஜாராவுடன் களத்தில் இணைந்தார். 155 பந்துகளில் புஜாரா அரை சதம் கடந்தார்.
மறுமுனையில் கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இந்த இன்னிங்ஸிலும் ஏமாற்றமளித்தார். தொடர்ந்து வந்த ரஹானே 14 ரன்களுக்கு வீழ்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த புஜாரா 214 பந்துகளில் பவுண்டரியுடன் தனது சதத்தை எட்டினார். அரை சதத்திலிருந்து, சதத்துக்கு 60 பந்துகளுக்கும் குறைவாகவே அவர் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தேநீர் இடைவேளையின் போது இந்தியா 303 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, ஆஸியை விட 148 ரன்கள் பின் தங்கி இருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago