பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்.
பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டிகள் டோக்கியோ நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி, ஜப்பானின் நவோமி ஒஸாகாவுடன் மோதினார். இப்போட்டியில் வோஸ்னியாக்கி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்த வோஸ்னியாக்கி 2015-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு வெல்லும் முதல் சாம்பியன் பட்டமாகும் இது. டென்னிஸ் போட்டிகளில் அவர் பெறும் 24-வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த வோஸ்னியாக்கி, “ஒஸாகா இப்போட்டியில் கடுமையாக போராடினார். இன்றைய போட்டியில் நான் ஒவ்வொரு புள்ளியை எடுப்பதற்கும் கடுமையாக போராடவேண்டி இருந்தது. இந்த வெற்றி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். நான் கடந்த 2008-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு சாம்பியன் பட்டத்தையாவது வென்று வருகிறேன். இந்த ஆண்டு பசிபிக் ஓபனில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் அந்த பெருமையை தக்கவைத்துள்ளேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago