சென்னை கால்பந்து லீக் இன்று தொடக்கம்

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து லீக் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகின்றன. இது தொடர்பாக சென்னை கால்பந்து சங்கத்தின் தலைவர் வருண் திரிபுரனேனி, செயலர் சுரேஷ் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

சென்னை கால்பந்து லீக் போட்டிகள் மார்ச் 27 (இன்று) முதல் ஜூன் மாதம் வரை நடைபெறுகின்றன. சென்னை நேரு மைதானம், நேரு மைதானத்தின் பி ஆடுகளம், சென்னை நேரு பூங்கா ஆகியவற்றில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 96 கால்பந்து கிளப்புகளைச் சேர்ந்த சுமார் 2,500 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சீனியர் டிவிசன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 லட்சமும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.1.5 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகின்றன. சீனியர் டிவிசனில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்படும் வீரருக்கு ரூ.1,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. இதுதவிர முதல் டிவிசன், 2-வது டிவிசன், 3-வது டிவிசன், 4-வது டிவிசன்களில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட

வுள்ளன. அனைத்து போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பரிசுத் தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை லீக்கில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் வீ கேர் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு காயங்கள் ஏற்படும்போது வீ கேர் மருத்துவமனையில் இலவசமாக கிகிச்சை பெறலாம். இதுதவிர தரமான கால்பந்து வீரர்களை உருவாக்கும் வகையில் சென்னையில் 4 இடங்களில் கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பயிற்சியாளர்கள், ரெப்ரிக்கள் ஆகியோருக்கு புத்துணர்வு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 7-வது ஆண்டாக சென்னை செயின்ட் ஜோசப் குழுமம் ஸ்பான்சர் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது செயின்ட் ஜோசப் குழுமம். போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சிற்றுண்டி வழங்கவும் அக்குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர பள்ளிகள் இடையிலான பிரீமியர்

லீக் கால்பந்து போட்டிக்கும் செயின்ட் ஜோசப் குழுமம் ஸ்பான்சர் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். அப்போது செயின்ட் ஜோசப் கல்லூரி குழுமங்களின் தலைவர் பாபு மனோகரன் முதற்கட்டமாக ரூ.3 லட்சத்துக்கான காசோலையை சென்னை கால்பந்து சங்க தலைவர் வருணிடம் வழங்கினார்.

வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் முதல் டிவிசன் போட்டிகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் மெட்ராஸ் ஸ்போர்ட்ஸ் யூனிட் அணியும், சேலஞ்சர்ஸ் யூனியன் அணியும் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் மத்திய உற்பத்தி வரித் துறை அணியும், நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதுகின்றன. 30-ம் தேதி முதல் சீனியர் டிவிசன் போட்டிகள் தொடங்குகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்